செய்திகள்
Choose the Course சேவைகள்
See What we do அறிமுகம்
எமது இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள்
An introduction to Brahma Kumaris பிரம்மா குமாரிகள் : ஓர் அறிமுகம்
Enrol Now
இராஜயோக தியான பயிற்சி

ஏழு நாள் ஆரம்ப பாடத்திற்கு பதிவு செய்துகொள்ளுங்கள். அருகில் உள்ள கிளை நிலையத்திற்கு நேரிலோ அல்லது ஆன்லைன் வகுப்பிலோ சேர்ந்து இந்த பயிர்சியை தொடரமுடியும்.

பதிவு செய்
கேள்விகளும் பதில்களும் (FAQ)
 • பிரம்மா குமாரிகள் என்றால் யார்?

  பிரம்மா குமாரிகள் (BK) 1930களில் இந்தியாவில் பிரம்மா பாபாவால் நிறுவப்பட்டது, இப்போது அதன் ஆன்மீக தலைமையகம் இந்தியாவின் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ளது. இந்தியாவுக்கு வெளியே பிரம்மா குமாரிகள் சேவை 1971 இல் தொடங்கியது, இப்போது 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கள் மையங்களை கொண்டுள்ளது. தற்போது சுமார் பத்து லட்சம் மாணவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பல்வேறு கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு ஆன்மீக கல்வி மற்றும் மன பயிற்சியை எளிய முறையில் வழங்குகிறது, மேலும் அவர்களின் உண்மையான உயர்ந்த குணத்துடன் வாழவும், சிறந்த உலகத்தை உருவாக்க அவர்களை ஊக்குவிக்கிறது.

 • பிரம்மா குமாரிகளின் நோக்கம் என்ன?

  மனித இனம் இழந்துவிட்ட சிறப்பான பண்புகளை மீட்பதும், சமுதாயத்தில் மக்களுக்கு உண்மையான திசைகாட்டியாக இருப்பது.

  மக்களிடையே உயர்ந்த பண்புகளை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, மனித சமுதாயத்திற்கு நன்மை பல கிடைக்குமாறு செய்வது.

  அனைவரும் கடைப்பிடிக்கும்படியான எளிய முறையில் ஆன்மீகம் மற்றும் தார்மீகப் பண்புகளைப் பற்றி புரிய வைத்து, நற்பண்புகளை, ஆன்மீக குறிகோள் மூலம் அவரவர்தகுதிக்கேற்றாற் போல், மனோசக்தியை வளர்ப்பது.

  ஒருவர் தன்னுடைய இயல்பான ஆன்மீக உணர்வை மீண்டும் உணரச்செய்வது.  மேலும் அதை உறுதிப்படுத்தி, உள்ளார்ந்த பண்புகள் மற்றும் உயர்ந்த நடத்தையின் மூலம் உலக சகோதரத்துவத்தை உணர்த்துவது.

  ஓருவரின் விழிப்புணர்வில் மாற்றம் ஏற்படுத்துவது. அவர்களுடைய மனப்பாங்கு, பார்வை மற்றும் செயலில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் உலக மாற்றத்திற்கு வழி செய்தல்.

  மனிதவள மேம்பட்டிற்காக, மதச்சார்பற்ற ஆன்மீக நெறிமுறைகளின் மூலம் வாழ்க்கையில், ஒவ்வொருவரின் உரிமைகள், பொறுப்புகளை உணர்த்துவது.

 • பிரம்மா குமாரிகள் இந்த நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்?

  பிரம்மா குமாரிகளின் இயக்கம் தன் சர்வதேச மையங்களின் மூலம் இராஜ யோக தியானம், விரிவுரைகள், பட்டறைகள், குறுகிய கால படிப்புகள் மற்றும் சுய மேம்பாட்டு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. பல்வேறு தேவைகளுக்கு சேவை செய்யும் பல சமூக மேம்பாட்டு திட்டங்களும் உள்ளன.

  ஒரு தேசிய மற்றும் சர்வதேச அளவில், இவ்வியக்கம் சமூக மற்றும் மனிதாபிமான அக்கறையின் செயல்பாடுகளில், மக்கள் பங்கேற்க வாய்ப்புகளை வழங்கும் பல்வேறு திட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

 • அண்மை செய்திகள்
  August 25, 2020
   நமது அனைத்து தியான வகுப்புகள் இணையதளம் வழியாக ஒளிபரப்ப படுகிறது. நமது அனைத்து கிளை  நிலையங்களும் தற்போது கொரோனா காரணத்தினால் இயங்குவதில்லை
  August 25, 2020
  தாதி அவர்கள் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தார்