இராஜயோக தியான அனுபவம்

தன்னை ஒரு திறமையான, சக்தி மிக்க, வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியானவராக (ஆத்மாவாக) தன் மனக்கண்ணில் பாருங்கள்.

தன்னுடைய மனதில் வரும் ஒவ்வொரு எண்ணங்களையும், அதன் எதிர்விளைவையும் கவனியுங்கள். உங்கள் எண்னங்களை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்.  அப்போது உங்களது மனதில் வரும் எண்ணங்கள் வீணானது என்றால் அதை செயல்படுத்த  வேண்டாம் என்ற கட்டுபடுத்தும் சக்தி உங்களிடம் இருப்பதை நீங்கள் உணருவீர்கள்.

இப்போது உங்களிடம் இருக்கும் எதிர்மறையான பழக்கங்கள், எதை நீங்கள் நடைமுறையில் கொண்டு வர விரும்பவில்லையோ….. அதாவது தன்னை பற்றிய தாழ்வான எண்ணங்கள், குற்ற உணர்ச்சிகள், கவலைகள் போன்றவைகளை…..  இனி அவை ஒருபொழுதும் வீட்டிலோ, அலுவலகங்களிலோ அல்லது  உறவினர்களிடமோ மீண்டும் வராதபடி கட்டுபடுத்த முடியும்.

சிலர் தன்னை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை கடினமாக கருதுகிறார்கள்,  ஆனால் தன்னை ஆத்மா என்று உணரும் பொழுது, உங்களது முழு கட்டுப்பாடும் உங்களிடம் இருப்பதை நீங்கள் உணருவீர்கள். அப்போது என்னுடைய வாழ்க்கை முற்றிலும் என்னிடம் தான் உள்ளது என்பதை உணர்வீர்கள்.

உங்களது வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பானவர். நமது தாய் மற்றும் தந்தை என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்தனர். இப்பொழுது நீங்கள் சுதந்திரமாக இருப்பவர் (ஆத்மா), எனவே நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க முடியும்.

ராஜயோக தியானத்தினால்  நீங்கள் கடந்த கால வாழ்க்கையின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, இப்போது நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட வாழ்க்கையை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். இது தான் இராஜயோகத்தின் சக்தி..