பிரம்மா குமரிகளால் பயிற்றுவிக்கப்படும் இராஜயோக தியானத்தில் அடிப்படை ஏழுநாள் பாடமுறையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பயிற்சியானது மனித வாழ்க்கையில் உயிருக்கும் பொருட்களுக்குமிடையே உள்ள உறவினைபற்றியும், ஆத்மாக்கள், இறைவன் மற்றும் இவ்வுலகம் குறித்த உறவினைப்பற்றிய புரிதலையும் அளிக்கிறது.  இந்த பயிற்சியில் அளிக்கப்படும் பாட வகுப்புகளின் மூலம் உள்நோக்கு முகமான (தன்னை பற்றிய நற்சிந்தனைகளில்) பயணத்தை மிகவும் தெளிவாகவும், திறமையாகவும் செய்ய முடியும்.

ஏழுநாள் பாடமுறையின் சிறப்பம்சங்கள்

  • மனதின் விழிப்புணர்வு நிலை மற்றும் தன்னை உணருதல்
  • இறைவனிடம் வைக்கும் தொடர்பும் உறவுமுறையும்
  • கர்மத்தின் விதி
  • காலத்தின் சுழற்சி
  • மனித வாழ்வின் ஆன்மீக மரம்
  • ஆன்மீக வாழ்க்கை முறை

பாடம்-1 : ஆத்மா

ஆத்மா என்பது என்ன ? மனம் என்பது என்ன ?அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருமே  எத்தனையோமுறை “நான்”  “நான்” என்ற வார்த்தையை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் இந்த பூமிக்கு எங்கிருந்து வந்துள்ளேன் ? / எது என்னுடைய உண்மையான வீடு ? மூன்று உலகங்கள் எவை ? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது ? முக்தியையும், சாந்தியையும் அடைய வேண்டும் என்று மனிதன் விரும்புகிறான் (மேலும் தெரிந்து கொள்ள )

பாடம்-2 : பரமாத்மா 

ஒரு ஆச்சரியமான விஷயம் பரமாத்மாவை எல்லோரும் ஐயனே! அப்பனே! எங்கள் கஷ்டத்தைப் போக்குபவனே! என்றெல்லாம் சொல்லி நினைக்கின்றனர்.  ஜோதிர்பிந்து சொரூபமான சிவன் கலியுகக் கடைசியில், தர்மம் அழிந்துவிடும் சமயத்தில், உலக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே முதன் முதலில் சூட்சும தேவதைகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரனைப் படைக்கிறார். (மேலும் தெரிந்து கொள்ள )

பாடம்-3 : காலச்சக்கரமும் உலக நாடகமும்

இயற்கையும் ஆத்மாவும் இணைந்து நடிக்கும் அனாதியான மனித சிருஷ்டியே ஒரு நாடகம் இதைத் தெரிந்து கொள்வதால் ஒரு ஜீவாத்மா வானது அளவுக்கப்பாற்பட்ட ஆனந்தமடையும். சிருஷ்டி என்னும் தலைகீழான மரமும் அதன் விதை வடிவமான பரமபிதாவும். இவ்வுலக சிருஷ்டியைப் பரமாத்மா ஒரு தலை கீழான மரமாகச் சொல்லுகிறார். மற்ற மரங்களின் விதைகளை மண்ணில் விதைக்கிறார்கள்; மரம் மேல்நோக்கி வளர்கிறது. மனித சிருஷ்டி என்னும் மரத்தின் விதையான பரமபவித்திரமான பரமபிதா பரமாத்மா பரந்தாமத்தில்  இருக்கிறார். (மேலும் தெரிந்து கொள்ள )

பாடம்-4 : கர்மா, செயலின் பலன்கள்

கர்மா என்றால், செயல் என்று பொருள். இந்த எல்லையற்ற உலக நாடக மேடையில் நாம் அனைவரும் நடிகர்கள். இந்த கர்மஷேத்திரத்துக்கு நாம் வந்து, செயலாற்றி, அவற்றின் பலன்களை நாம் அனுபவிக்கவேண்டும் என்பது நியதி. உணர்ச்சிகளை வெளி யிடுவது மற்றும் அனுபவம் செய்வதுதான் வாழ்க்கை என்பதாகும். வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்கிற பழமொழி ஒன்று உண்டு. (மேலும் தெரிந்து கொள்ள )

பாடம்-5 : இராஜயோகத்தின் விதிகள் 

இராஜயோகத்தின் வழிமுறைஆத்மாவில் சாந்தி, ஆனந்தம், அன்பு தூய்மை, சக்தி மேலும் திவ்விய குணங்கள் நிறைய வேண்டும் என்பதற்காக ஆத்மாவை ஞானக் கடலும், சாந்திக்கடலும் ஆனந்தக் கடலும், அன்புக் கடலும் சர்வ சக்திவானும் பதீத பாவனருமான சிவபெருமானுடன் இணைப்பதே யோகத்தின் உண்மையான அர்த்தமாகும். மனதைச் சுத்தப்படுத்துவதும், எண்ணங்களை உயர்த்துவதும், மாற்றுவதும், மனம் எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் யோகத்தின் பலன் ஆனதால் யோகப் பயிற்சிக்கு சில விதிகளைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது. யோகத்தில் உயரவேண்டுமானால் அஸ்திவாரத்தூண்கள் பலமாக இருக்க வேண்டும்.  (மேலும் தெரிந்து கொள்ள )

பாடம்-6 : இராஜயோகத்தின் பலன்கள்

இராஜயோகத்தினால் மனமானது பரமபிதா பரமாத்மாவிடம் இணைந்து அழியாத சுகத்தையும் சாந்தியையும் அடைவதோடு, பலவிதமான ஆத்ம சக்திகளையும் அடைகிறது. அவற்றில் முக்கிய மானவை, எட்டு, அவை சிறந்தன என்பதோடு மகத்துவமும் வாய்ந்தவை. இராஜயோகத்தை இடைவிடாமல் பழக்கப் படுத்திக்கொண்டால் ஒரு மனிதனுக்குப் பல சக்திகள் கிடைக்கின்றன. வரும் தடங்கல்களைப் பொருட்படுத்தாமல் ஆத்மீகத்துறையில் முன்னேறிச் செல்ல இச்சக்திகள் மிகவும் தேவை.  (மேலும் தெரிந்து கொள்ள )