இராஜயோக தியானத்தில் அடிப்படை ஏழுநாள் பாடம்:

பிரம்மா குமரிகளால் பயிற்றுவிக்கப்படும் இராஜயோக தியானத்தில் அடிப்படை ஏழுநாள் பாடமுறையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பயிற்சியானது மனித வாழ்க்கையில் உயிருக்கும் பொருட்களுக்குமிடையே உள்ள உறவினைபற்றியும், ஆத்மாக்கள், இறைவன் மற்றும் இவ்வுலகம் குறித்த உறவினைப்பற்றிய புரிதலையும் அளிக்கிறது.  இந்த பயிற்சியில் அளிக்கப்படும் பாட வகுப்புகளின் மூலம் உள்நோக்கு முகமான (தன்னை பற்றிய நற்சிந்தனைகளில்) பயணத்தை மிகவும் தெளிவாகவும், திறமையாகவும் செய்ய முடியும்.

அடிப்படை ஏழுநாள் பாடமுறையின் சிறப்பம்சங்கள்

 • மனதின் விழிப்புணர்வு நிலை மற்றும் தன்னை உணருதல்
 • இறைவனிடம் வைக்கும் தொடர்பும் உறவுமுறையும்
 • கர்மத்தின் விதி
 • காலத்தின் சுழற்சி
 • மனித வாழ்வின் ஆன்மீக மரம்
 • ஆன்மீக வாழ்க்கை முறை

சுய ஆய்வு

 • தினசரி தியானத்திற்காக நேரம் மற்றும் இடத்தினை உறுதிப்படுத்துவது
 • உங்களின் எண்ணம், உணர்ச்சிகள் மற்றும் பதிற்செயலை (response) உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்
 • தியானத்தின் திறனை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது

இதர பயிற்சிகள்

இராஜயோக தியானப்பயிற்சி மட்டுமன்றி கருத்தரங்குகள், பாடமுறை, கல்வி பட்டறை, புத்துணர்வுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை பிரம்மகுமாரிகள் நிறுவனம் அளித்து வருகின்றது. இப்பயிற்சியில் அளிக்கப்படும் விஷயங்கள் (அல்லது) கருத்துக்களாவது ஒவ்வொரு நாடு (அ) இடம், கலாச்சாரம் மற்றும் அதன் பண்பாடு (அ) நாகரீகம் மற்றும் வசதிகளின் அடிப்படையில் வேறுபடும். நீங்கள் இருக்குமிடத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து அருகிலுள்ள பிரம்ம குமாரிகள் கிளைனிலயத்தை அனுகவும்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல் (Anger Management):

கோபம் என்பது மனதுக்குள் இருக்கும் வலியின் வெளிப்பாடு, கோபம் என்பது நம்முடைய உலகில் எதுவும் சரியல்ல என்ற அடையாளத்தின் வெளிப்பாடு. கோபம் என்பது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிக்கக்கூடிய உணர்ச்சிகளில் ஓன்றாகும். எவ்வாறு உள்ளுக்குள் இருக்கும் கோபத்தை நமது ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றுவது என்பது கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது ?

 • கோபத்திற்கான காரணங்களை உணருங்கள்.
 • எண்ணங்களின் சக்தியை அறிந்து கோபத்தைக் கையாளுதல்
 • உள்ளுக்குள் இருக்கும் வலியை நீக்கிவிடுவது
 • ஆன்மீக ஞானம் மற்றும் விழிப்புணர்வின் மூலம் கோபத்தை மாற்றம் செய்வது.
 • அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கான நடைமுறை உபகரனங்களை உருவாக்குங்கள்

ஆக்கப்பூர்வமான சிந்தனை (Positive Thinking) :

சிலர் தியானமுறையை கற்றுக்கொள்ள ஆர்வமில்லாமல் இருக்கலாம் எனினும் ஆன்மீக விளக்கத்தினால் மனதின் செயல் திறனை வளர்க்கவும், சிந்தனையை தெளிவானதாக ஆக்கவும் மற்றும் எண்ணங்களை சரியாக நிர்வாகம் செய்வதற்கும் “ஆக்கபூர்வமான சிந்தனை” என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் நன்மைகள் சில

 • உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு எஜமானராவது .
 • சுய பிரதிபலிப்பு மற்றும் சுய முன்னேற்றத்திற்கான கலையை மேற்கொள்தல்.
 • மனதின் ஆக்கப்பூர்வமான சக்திகளை தட்டி எழுப்புதல்
 • எதிர்மறையான, சக்திகளை குறைக்கும் வார்த்தைகள், முனுமுனுப்பது போன்றவைகளை அடியோடு முடித்துவிடலாம்
 • சதா நிலையான ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை அதிகரிப்பது.

சுய மரியாதை (Self Respect)  :

நாம் எவ்வளவு வெற்றியாளராக இருந்தாலும் சதா நம்முடைய சுய மதிப்பை உயர்ந்ததாக வைத்து கொள்ளலாமே. நமது அடிப்படை குணங்களையும், நற்பண்புகளையும் மீண்டும் நினைவு செய்வதன் மூலம் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடனும் அமைதியாகவும் அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ராஜயோக தியான முறை மிகவும் துணை புரியும். சுய மதிப்பினை உயர்வாக வைக்க சில முக்கிய குறிப்புகள்:

 • உங்களின் நேர்மறையான சுயத்தை கண்டறியிங்கள்
 • உங்களின் சுய பலம், திறமைகள், தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிந்து தன்னைத்தான் ஏற்றுக்கொள்ளுங்கள்
 • பலமான (ஆரோக்கியமான) உறவுகளை ஏற்படுத்தவும், பயத்தைப் போக்கவும், பிடிவாதத்தை அகற்றவும் திறமையான வழிமுறைகளை உருவாக்கலாம்
 • உள்ளார்ந்த சமநிலை சீராக இருப்பதற்கு சரியானவற்றை தேர்ந்தெடுத்து தன்னை சக்திசாலி ஆக்கலாம்

மனஅழுத்தமற்ற வாழ்க்கை (Stress Management) 

இன்றைய உடல் ஆரோக்கியத்தின் குறைபாடுகளுக்கான அதிகப்படியான காரணம் மனஅழுத்தமே. இன்றைய இயந்திர வாழ்க்கையில்  ஏறக்குறைய நம் அனைவருமே  ஒரு கட்டத்தில் மனஅழுத்தத்தை சந்திப்பதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். மனஅழுத்தத்தின் காரணங்கள் இதுவாக இருந்தாலும்  நம்முடைய உடலின் சக்தியும், மனதின் சக்தியும் விரயமாகிறது.  ஒருவர் ராஜயோகா தியானத்தை பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும் என்பது குறிப்பிட தக்கது.  மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான சில குறிப்புகள்:

 • பல்வேறுவிதமான மன அழுத்தங்களைக் கண்டறிந்து, வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிதல்.
 • மன அழுத்தத்தை தூண்டுபவை மற்றும் நாம் ஏன், எப்படி செயல் படுகிறோம் என்பதை கண்டறிக
 • உள்ளுக்குள் மாற்றம் ஏற்படுத்துவதற்கான நடைமுறைகள் / வழிமுறைகளை பயன்படுத்துதல்
 • மாற்றத்தைக் கண்டு பயப்படுவதி விட்டு அதனை ஏற்றுக் கொள்ளுதல்.
 • மன அழுத்தத்தை கையாள உங்களது ஆன்மீக அறிவு /புத்தியை அதிகரித்தல்

குடியிருப்புடன் கூடிய  பயிற்சிங்கள் மையங்கள் 

எங்களது தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி அளிக்கும் வளாகம் போடவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் இயற்கையான சூழ்நிலை இங்கு  குழுவாக மற்றும் தனித்து வரும் அனைவருக்கும் புத்துணர்ச்சியளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.  இங்கு ஆழமான தியானதின் அனுபவத்தையும், ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை நிலை, குடும்பம் மற்றும் அலுவலக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான ஆன்மீக விளக்கங்களும், சிறப்பான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.