தொடக்கம்

பிரம்மா குமாரிகள் அமைப்பு ஆரம்பகாலத்தில் “ஓம் மண்டலி” என்ற பெயருடன் இந்தியாவின், அன்றைய வடமேற்கு மாகாணமாக இருந்த சிந்துவில் உள்ள ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள அபு மலையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதை தொடங்கின ஓய்வுபெற்ற இந்திய தொழிலதிபர் தாதா லேக்ராஜ், சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவராவார். அவரது ஆன்மீக பெயர் பிரஜாபிதா பிரம்மா, அவர் அன்பாக பிரம்மா பாபா என்று அழைக்கப்படுகிறார். 1936 இல் தொடர்ச்சியான காட்சிகளைக் கண்டப்பின்னர், ஒரு நல்லொழுக்க மற்றும் தியான வாழ்க்கையின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் கற்பிக்கக்கூடிய ஒரு பள்ளியை உருவாக்க ஊக்கமளித்தார். ‘ஓம் மண்டலி’ உருவானது. இதில் ஒரு சில ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு சமூகமாக ஒன்றாக இருக்க முடிவு செய்தனர்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னால் சமூக எழுச்சிகள் இருந்தபோதிலும்,  இவ்வியக்கத்தினர் ஒன்று கூடினர், ஆரம்பத்தில் ஒரு வருடம் ஹைதராபாத்தில் இருந்த இவர்கள் பிறகு கராச்சிக்கு குடிபெயர்ந்தனர். காலப்போக்கில், ஆன்மாவின் தன்மை, கடவுள் மற்றும் நேரம் பற்றிய எளிய மற்றும் தெளிவான ஞானம் வெளிப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் (பிரிவுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு), இந்தக் குழு இந்தியாவின் மவுண்ட் அபுவில் உள்ள தற்போதைய இடத்திற்கு சென்றது. அதுவரை, கிட்டத்தட்ட 400 நபர்கள் தன்னிறைவு பெற்ற சமூகமாக வாழ்ந்து, ஆழ்ந்த ஆன்மீக ஆய்வு, தியானம் மற்றும் சுய மாற்றத்திற்காக தங்கள் நேரத்தை செலவிட்டனர்.

பிரம்மா பாபா

1880 களில் லேக்ராஜ் கிருபலானியாக ஒரு பணிவான வீட்டில் பிறந்த பிரம்மா பாபா, ஒரு கிராம பள்ளி ஆசிரியரின் மகன் ஆவார். லேக்ராஜ், இந்து பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டார். பல்வேறு வேலைகளில் இருந்த பின்னர், அவர் நகை வியாபாரத்தில் நுழைந்தார். பிறகு வைர வர்த்தகராக கணிசமான வருமானம் பெற்றார். அவர் ஐந்து குழந்தைகளின் தந்தை. 

அவர் அவரது சமூகத்தில் ஒரு தலைவராக இருந்தார், குறிப்பாக பரோபகாரத்திற்கு பெயர் பெற்றவர். 1936 ஆம் ஆண்டில், அவரது வயதில் பெரும்பாலான மக்கள் ஓய்வு ஊதியத்தைத் திட்டமிடத் தொடங்கிய நேரத்தில், அவர் உண்மையில் தனது வாழ்க்கையின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் கவர்ச்சிகரமான கட்டத்தில் நுழைந்தார். தொடர்ச்சியான ஆழ்ந்த ஆன்மீக அனுபவங்கள் மற்றும் காட்சிகளுக்குப் பிறகு, அவர் தனது வியாபாரத்தை விட்டுவிட்டு, தனது நேரத்தையும், ஆற்றலையும், செல்வத்தையும் பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகமாக உருவாவதற்கு அர்ப்பணித்தார்.

1937 மற்றும் 1938 க்கு இடையில், அவர் எட்டு இளம் பெண்களைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழுவை அமைத்து, தனது செல்வங்கள், சொத்துக்கள் என அனைத்தையும் இந்த அறக்கட்டளையில் ஒப்படைத்தார்.  இந்தியா முழுவதும் பல பிரம்மா குமாரிகள் மையங்களை உருவாக்க உறுதுனையாக இருந்த பின்னர், அவர் 1969 ஜனவரியில் தன் பூத உடலை நீத்தார். வாழ்க்கையின் ஆழ்ந்த உண்மைகளை சவால்கள் நிறம்பிய சமூகத்தில் எடுத்துரைத்து, எடுத்துக்காட்டாக விலங்கினார். இந்த சாதாரண மனிதனின் பெருமையை, மதுபன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  சாந்தி ஸ்தம்பம் தெளிவுபடுத்துகிறது.

வளர்ச்சி

1936 ஆம் ஆண்டில் பிரம்மா பாபாவிற்கு தொடர்ச்சியான காட்சிகள் கிடைத்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் தொடங்கிய வாழ்க்கை முறை புரட்சி, லட்சக் கணக்கானவர்களுக்கு தன்னிறைவுடனும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உருவாக்குவதற்கும் ஊக்கமளித்துள்ளது. பிரம்மா பாபா கற்பித்த வாழ்க்கைத் திறன்கள் காலத்தின் சோதனையாக இருந்தன. அவர் முன்னணியில் வைத்திருந்த இளம் பெண்கள், இப்போது அவர்களின் எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில், அன்பு, அமைதி மற்றும் ஞானத்தின் கலங்கரை விளக்கங்களாக திகழ்கின்றனர்.

தற்போதைய நிர்வாகிகள்

தாதி ஹிருதய மோஹினி

இவர் பிரம்மா குமாரிகளின் தலைமை நிர்வாகி ஆவார். ஹிருதய மோஹினி என்பதற்கு ‘இதயத்தை ஈர்ப்பவர்’ என்று பொருள். இவரின் குணத்திற்கேற்ப இந்த பெயர் இவருக்கு சரியான பொருத்தமாகும். குல்சார் (‘ரோஜா தோட்டம்’) என்று பிரபலமாக அறியப்பட்ட இவர், 1937 ஆம் ஆண்டில் பிரம்மா பாபாவால் அமைக்கப்பட்ட போர்டிங் பள்ளியின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். ஆன்மீகக் கொள்கைகள் மற்றும் நடைமுறையில் அவரது நீண்டகால, ஒருமித்த பயிற்சி இவரை நல்லொழுக்கங்களின் முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. எளிமையான, அமைதியான மற்றும் ஆழ்ந்த ஞானத்தின் மூலம் இவர் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்துகிறார்.

தாதி இரத்தன் மோஹினி

அவர் பிரம்மா குமாரிகளின் கூடுதல் தலைமை நிர்வாகியாகவும், தலைமையகத்தில் வசிக்கும் முதுகெலும்பு உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார். குழந்தை பருவத்தில் இவர் பிரம்மா குமாரிகளின் ஆரம்ப நாட்களில் தனது வாழ்க்கையின் அடித்தளத்தை உருவாக்கினார். இவரது பெயருக்கு ஏற்ப்ப, இவர் எப்போதும் இலேசாகவும், பதற்றம் இல்லாமலும் தோன்றுவதால், ‘மிக அழகான மணி – இரத்தன் மோஹினி’ என்றழைக்கப்படுகிறார். பொறுப்புணர்ச்சி மற்றும் நேர்மைமிக்க இவரின் கவனம் பாரதம் முழுவதும் உள்ள ஆன்மீக ஆசிரியர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதில் இருந்து வருகிறது, மேலும் இளைஞர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் குழுவிற்க்கு ஆன்மீக வளமாக செயல்படுகிறார். இவரது தொண்ணூறுகளிலும், இவர் கலகலப்பாகவும், இதயத்தில் இளமையாகவும் இருக்கிறார்.

தாதி இஷீ

இவர் கூட்டு நிர்வாகி ஆவார். தாதி இஷுவும் இவரது குடும்பத்தினரும் பிரம்மா குமாரிகளுடன் மிகவும் இளம் வயதிலேயே தொடர்பு கொண்டனர். இவர் இவ்வியக்கத்தின் போர்டிங்க் பள்ளியில் சேர்ந்தார், இது முறையான ஆன்மீக கல்வி மற்றும் பயிற்சியின் சமநிலையை வழங்கியது. 1950 களில் இவ்வியக்கம் அபு மலைக்கு மாற்றப்பட்ட பின்னர், பிரம்மா பாபாவுக்கான அனைத்து கடிதங்களையும் தாதிஜி கையாண்டார், பின்னர் நிதித் துறையை கவனித்தார். தாதியின் கண்ணியம், உள்நோக்கமுகம், விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை அனைவருக்கும் ஆதரவான ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக தூணாக அமைகின்றன.