இராஜயோக தியான வழிமுறை:
இராஜயோக என்பது தியானம் மற்றும் ஆன்மீக உணர்வின் ஒரு பழமைவாய்ந்த யோக முறை ஆகும். ஆத்மாவின் உண்மையான குணங்கள் மற்றும் நல்லொழுக்கங்களை மீண்டும் வெளிக்கொணர்வதன் மூலம் நமக்குள் இருக்கும் அமைதி, சக்தி மற்றும் சுய மரியாதையை அனுபவம் செய்ய உதவுகிறது. இது ஆத்மாவின் அறிமுகம் மற்றும் வாழ்வின் குறிக்கோள் தொடர்பான பல கேள்விகளுக்கு பதில்களை வழங்குகிறது. மேலும் உண்மையான மன அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கான ஒரு பாதையைத் திறக்கிறது.
இராஜயோகம் உங்களைப் பற்றிய தெளிவான ஆன்மீக புரிதலை வழங்குகிறது. உங்களுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் நேர்மறையான குணங்களை மீண்டும் கண்டுபிடித்து பயன்படுத்த உதவுகிறது. புதிய அணுகுமுறைகளை உருவாக்க உதவுகிறது. மற்ற கலைகளைப் போலவே, இதற்கும் பயிற்சி தேவை. ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் தியானம் செய்வதன் மூலம், அது விரைவில் ஒரு இயற்கையான, எளிதான பழக்கமாக மாறும். இந்த முயற்சிக்கு தக்க வெகுமதியை உங்களால் நன்றாக உணர முடியும்.
இராஜயோகம் என்பது கண்களை திறந்தபடி செய்யும் தியானமாகும். இதை யார் வேண்டுமென்றாலும் எந்த இடத்திலும் கூட செய்யலாம். ஓய்வெடுக்க விரும்பினாலும், ஒருமுகமாக இருக்க விரும்பினாலும், ஆக்கப்பூர்வமாக இருக்க விரும்பினாலும் அல்லது தனிப்பட்ட ஞானத்தின் தெளிவை தேடினாலும், இராஜயோக தியானம் அந்த ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்யும். அனைத்து யோகத்திலும் தலை சிறந்த யோகமாக இருப்பதால் இதற்கு இராஜயோகம் என்று பெயர். இதில் உடற்பயிற்சியோ, மூச்சுப்பயிற்சியோ, மந்திரங்களை உச்சரிப்பதோ இல்லை.
அத்தகைய எளிமையான இராஜயோகத்திற்கான ஐந்து அடிப்படை வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் படி : தளர்வு (Relaxation)
தளர்வு என்பது மனதையும் உடலையும், பதற்றம் மற்றும் அழுத்தத்தில் இருந்து விடுபடுத்தி அமைதியில் நிலைபெற செய்தல்
இரண்டாம் படி :ஒருமுகச்சிந்தனை (Concentration)
ஒருமுகச் சிந்தனை என்பது தன் நேரத்தை சரியான முறையில் உபயோகித்து அதை பயனுள்ளதாகவும், ஆக்கபூர்வமாகவும் மாற்றுவது. என்னை தளர்வடைய செய்த பின்னர், என்னுடைய முழு கவனத்தையும் என் மீது கொண்டு வருகிறேன்.
மூன்றாம் படி : ஆழ்ந்த சிந்தனை(Contemplation)
ஆழ்ந்த சிந்தனை என்பது தன்னை பற்றியும் , தன் உள் உலகை பற்றியும் மேலும் தன் குணங்களை பற்றியும் சிந்தனை செய்வது.
நான்காம் படி :உணருதல்(Realisation)
உணருதல் என்பது நான் இதுவரை கேட்டுப் புரிந்து கொண்டதை அனுபவம் செய்யும் நிலை ஆகும்.அப்பொழுது எனக்குள் புதைந்து இருக்கும் அரிய சக்திகளை நான் அனுபவம் செய்கிறேன்.
ஐந்தாம் படி :தியானம்(Meditation)
தியானம் என்பது என்னுடைய மனதின் முழு கவனத்தை தன் மீது நிலைபெற செய்து மீண்டும் தனது அற்புதமான நிலையை உணர்வதே ஆகும்.