ஆத்மா என்பது என்ன? மனம் என்பது என்ன?

அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருமே  எத்தனையோமுறை “நான்”  “நான்” என்ற வார்த்தையைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தினந்தோறும், நான், எனது என்று சொல்லிக் கொண்டே இருந்த போதிலும், அவ்வாறு “நான்” என்று சொல்லும் பொருள் எது? அதன் உருவம் என்ன என்பதைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ள முடிய வில்லை. விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். விளங்காத புதிர்களை விஞ்ஞானத்தின் மூலம் விளக்கிவிட்டாலும் கூட நான் என்று சொல்வது எது? என்பதைப் பற்றிய உண்மை தெரியாது; அதாவது பிறவற்றைப்பற்றி தெரிந்து கொள்பவர் தன்னைப்பற்றி சரியான ரீதியில் அறிவதில்லை. நீங்கள் யார்? உங்களுடைய அறிமுகம் என்ன? என்று கேட்டால் உடனே தன் உடலின் பெயரையும், செய்யும் தொழிலையுமே கூறுகிறோம்,

 உண்மையில் “நான்” என்ற சொல் உடலிலிருந்து வேறுபட்ட, ஞானமுள்ள, ஆத்மாவையே குறிக்கும். ஆத்மாவும், உடலும் சேர்ந்த மனிதன் ஜீவாத்மா ஆகிறான். உடலானது பஞ்ச தத்துவங்கள் என்று சொல்லப்படும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பவைகளால் ஆனது. சிந்தனை சக்தியும் தீர்மானிக்கும் சக்தியும் ஆத்மாவில் உள்ளன. செய்யும் காரியங்களைப் பொறுத்து சம்ஸ்காரங்கள் அமைகின்றன.

ஆத்மா அழியாதது; ஜோதிமயமானது; புள்ளி வடிவமானது: மனித உடலில் புருவங்களுக்கு மத்தியில் மூளைப்பகுதியில் வாசம் செய்கிறது.  இரவு நேரத்தில் ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரம் மின்னுவதைப் போலவே ஆத்மாவும் திவ்யமான பார்வைக்குப் புள்ளி வடிவத்தில் தெரியும். புருவங்களுக்கு மத்தியில் ஆத்மா வசிப்பதனால் தான் ஆழ்ந்து சிந்திக்கும்போது நெற்றியைத் தேய்த்துக் கொள்கிறான். என் தலைவிதி நன்றாக இல்லை என்று சொல்லும் போது தன்னுடைய நெற்றியைத் தான் தேய்த்துக் கொள்கிறான். பக்தர்கள் கூட நெற்றியில், இரு புருவங்களுக்கு மத்தியில் தான் திருநீறு  அணிந்து  திலகம் இட்டுக் கொள்கின்றனர். இந்த இடத்தில் இருக்கும் ஆத்மா மூளையுடன் இணைந்து செயல்படுகிறது. மூளை யானது ஆத்மாவின் ஞானேந்திரியங்களுடனும், உடலின் கர்மேந்திரியங்களுடனும் இணைந்திருக்கிறது. 

இதைத் தான் பஞ்ச தத்துவங் களால் ஆன சிருஷ்டி என்றும், கர்மக்ஷேத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆகாய தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இவ்வுலக சிருஷ்டி அமைந்துள்ளது. இதைத் தலைகீழான மரமாக உருவகிக்கலாம். ஏனெனில் இதன் மூல விதையானவர் பரமாத்மா சிவனே ஆவார். அவர் பிறப்பு இறப்பு அற்றவர். அதிமேலான பிரம்ம லோகத்தில் வசிப்பவர்.

சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கும் மேலாக, ஆகாய தத்துவத்திற்கும் மேலாக சூட்சும உலகம் இருக்கிறது. ஒளிமயமான உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கான தனித்தனியான இருப்பிடங்கள்  உள்ளன. சூட்சும தேவதைகளான இவர்களின் உடல், எலும்பு, தோலால் ஆனதல்ல. ஆனால் பிரகாசமானது. திவ்யமான, ஞானக்கண்ணால் மட்டுமே காணக் கூடியது. இங்கு துன்பமில்லை, அசாந்தியும் இல்லை. எண்ணங்கள் இங்கு உண்டு: இயக்கம் உண்டு. ஆனால் சப்தமானது எழாது.

சூட்சம லோகத்திற்கு மேலாக, ஒரு உலகம் இருக்கிறது. அதை பிரம்ம லோகம், பரலோகம், நிர்வாண லோகம், முக்திலோகம் என்று பல பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இங்கு செம்பொன் நிறமான ஒளி பரவி இருக்கிறது அதையே பிரம்ம தத்துவம் அல்லது ஆறாவது தத்துவம் அல்லது மகா தத்துவம் என்று சொல்கிறோம். இதன் அம்சமாக ஜோதி பிந்து வடிவமான ஆத்மாக்கள் முக்தியடைந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு தர்மத்தைச் சார்ந்த ஆத்மாக்களும் தனித்தனியே பகுதி பகுதியாக இங்கு இருக்கின்றன.  இவற்றிற்கும் மேலாக, சதா முக்தி நிலையில் ஞானமுள்ள ஜோதிர் பிந்து ரூபத்தில் பரமாத்மா எனப்படும் சதாசிவனின் இருப்பிடம் இருக்கிறது. கல்பத்தின் கடைசியில், இச்சிருஷ்டியின் அழிவுக்குப்பின், தமது கர்மங் களுக்குத் தகுந்தாற்போல, பலனை அனுபவித்த பிறகு முழு தூய்மையடைந்த நிலையில் ஆத்மாக்கள் இங்கு செல்லுகின்றன. மனித ஆத்மாக்கள் கூட  பந்தனம் எதுவும் இல்லாத நிலையில் தான் இருக்கின்றன. இங்கு எண்ணம், செயல் எதுவுமே கிடையாது. பரமபிதா பரமாத்மா சிவனைத் தவிர வேறு எந்த குருவாலும் ஆத்மாக்களை இங்கு கொண்டு செல்ல முடியாது. இந்த உலகத்திற்குப் போவதே உண்மை யில் அமரநாத், ராமேஸ்வரம், காசி முதலிய இடங்களுக்கு ஒப்பாகும். ஏனெனில் அமரநாதராகிய பரமாத்மா சிவன் இங்கு தான் இருக்கிறார்.இவ்வுடல் மோட்டார் காரைப்போன்றது. இதன் டிரைவர் ஆத்மா: டிரைவர் காரை இயக்குவது போல ஆத்மாவும் இவ்வுடலை இயக்குகின்றது. டிரைவர் இல்லாத காரைப் போன்று ஆத்மா இல்லாத உடல் உபயோக மற்றது. தன்னைத் தான் ஆத்மா என்று நினைத்த பிறகுதான்  தான் அடைய வேண்டியதை அடைவதற்காக, ஒருவனால் முயற்சி செய்ய முடியும் என்று ஆத்மாக்களின் தந்தையான பரமாத்மா கூறுகிறார். நன்றாக காரை ஓட்டத்  தெரியாத ஒரு டிரைவரால் விபத்துக்கள் ஏற்படும்; காரில் அமர்ந்து வரும் பிரயாணிகளுக்கும் அதனால் துன்பம். இதே போன்று தன்னை ஆத்மா என்று உணராத காரணத்தால் தனக்கும் துன்பம், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பம், தான் வருத்தமாக இருப்பதால் தானும் நிம்மதியாக இல்லாமல் மற்றவர்களையும் நிம்மதி இழக்கச் செய்து விடுகிறார்கள். ஆகவே ஒவ்வொருவரும் தான் யார் என்று உணர வேண்டியது மிகவும் அவசியம்.

மூன்று லோகங்கள் எவை? 

பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது?முக்தியையும், சாந்தியையும் அடைய வேண்டும் என்று மனிதன் விரும்புகிறான். ஆனால் முக்திதாமம் அதாவது  சாந்திதாமம் எங்கே இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. அன்பு நிறைந்த பரமாத்மாவைச் சந்திக்க வேண்டும் என்று தான் மனிதன் விரும்புகிறான்; அவரை நினைக்கிறான். பரம பவித்திரமான பரமாத்மா வசிக்கும் தூய்மையான இடம் எது என்று அவனுக்குத் தெரியாது. எங்கிருந்து வந்து பரமாத்மா இவ்வுலகில் தோன்றுகிறார் என்பதும் தெரியாது. ஆத்மாக்கள் எங்கிருந்து வந்து, இவ்வுலகம் என்னும் நாடக மேடையில் நடிக்கின்றன என்பதும் மனிதனுக்குத் தெரியாது. எங்கிருந்து வந்தனவோ அந்த அமைதி நிறைந்த வீட்டையும் மறந்து விட்டான். அதனால் மறுபடியும் அந்த வீட்டிற்குப் போகவும் முடியாது.

நாம் இருப்பது ஸ்தூல உலகம். இவ்வுலகில் தான் ஆத்மாக்கள் எலும்பு, சதையால் ஆன உடல் எடுத்து நாடகத்தில் நடிக்கின்றன. இன்ப துன்பத்தையும் அதன் பலனாக அனுபவிக்கின்றன. ஜனன மரணம் என்னும் சக்கரத்தில் வருகின்றன. இவ்வுலகில் எண்ணங்கள் எழுவதும், எண்ணங்களின் ஆதாரத்தில் கர்மங் களைச் செய்து இன்ப துன்பங்களை அனுபவிப்பதும் நடைபெறுகின்றன. 

இதைத் தான் பஞ்ச தத்துவங் களால் ஆன சிருஷ்டி என்றும், கர்மக்ஷேத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆகாய தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இவ்வுலக சிருஷ்டி அமைந்துள்ளது. இதைத் தலைகீழான மரமாக உருவகிக்கலாம். ஏனெனில் இதன் மூல விதையானவர் பரமாத்மா சிவனே ஆவார். அவர் பிறப்பு இறப்பு அற்றவர். அதிமேலான பிரம்ம லோகத்தில் வசிப்பவர்.

சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கும் மேலாக, ஆகாய தத்துவத்திற்கும் மேலாக சூட்சும உலகம் இருக்கிறது. ஒளிமயமான உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கான தனித்தனியான இருப்பிடங்கள்  உள்ளன. சூட்சும தேவதைகளான இவர்களின் உடல், எலும்பு, தோலால் ஆனதல்ல. ஆனால் பிரகாசமானது. திவ்யமான, ஞானக்கண்ணால் மட்டுமே காணக் கூடியது. இங்கு துன்பமில்லை, அசாந்தியும் இல்லை. எண்ணங்கள் இங்கு உண்டு: இயக்கம் உண்டு. ஆனால் சப்தமானது எழாது.

சூட்சம லோகத்திற்கு மேலாக, ஒரு உலகம் இருக்கிறது. அதை பிரம்ம லோகம், பரலோகம், நிர்வாண லோகம், முக்திலோகம் என்று பல பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இங்கு செம்பொன் நிறமான ஒளி பரவி இருக்கிறது அதையே பிரம்ம தத்துவம் அல்லது ஆறாவது தத்துவம் அல்லது மகா தத்துவம் என்று சொல்கிறோம். இதன் அம்சமாக ஜோதி பிந்து வடிவமான ஆத்மாக்கள் முக்தியடைந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு தர்மத்தைச் சார்ந்த ஆத்மாக்களும் தனித்தனியே பகுதி பகுதியாக இங்கு இருக்கின்றன.  இவற்றிற்கும் மேலாக, சதா முக்தி நிலையில் ஞானமுள்ள ஜோதிர் பிந்து ரூபத்தில் பரமாத்மா எனப்படும் சதாசிவனின் இருப்பிடம் இருக்கிறது. கல்பத்தின் கடைசியில், இச்சிருஷ்டியின் அழிவுக்குப்பின், தமது கர்மங் களுக்குத் தகுந்தாற்போல, பலனை அனுபவித்த பிறகு முழு தூய்மையடைந்த நிலையில் ஆத்மாக்கள் இங்கு செல்லுகின்றன. மனித ஆத்மாக்கள் கூட  பந்தனம் எதுவும் இல்லாத நிலையில் தான் இருக்கின்றன. இங்கு எண்ணம், செயல் எதுவுமே கிடையாது. பரமபிதா பரமாத்மா சிவனைத் தவிர வேறு எந்த குருவாலும் ஆத்மாக்களை இங்கு கொண்டு செல்ல முடியாது. இந்த உலகத்திற்குப் போவதே உண்மை யில் அமரநாத், ராமேஸ்வரம், காசி முதலிய இடங்களுக்கு ஒப்பாகும். ஏனெனில் அமரநாதராகிய பரமாத்மா சிவன் இங்கு தான் இருக்கிறார்.