பரமாத்மாவை எல்லோரும் ஐயனே! அப்பனே! எங்கள் கஷ்டத்தைப் போக்குபவனே! என்றெல்லாம் சொல்லி நினைக்கின்றனர்; அழைக்கின்றனர். ஆனால் அவருக்கும் அழைப்பவர்களுக்கும் உள்ள சத்தியமான, தெளிவான சம்பந்தம் என்ன என்பதை அறிவதில்லை; எனவே அச்சம்பந் தத்தை அவரோடு கொள்ளவும் இல்லை. சரியான அறிமுகமும் அவரிடத்தில் அன்பும் இல்லாத காரணத்தால் அவரை நினைக்கவும் முடியவில்லை. ஏனெனில் மனதை அவரிடம் செலுத்தும் வழி தெரியவில்லை. அதன் விளைவாக அவரிடமிருந்து உரிமையுடன் அடைய வேண்டிய சாந்தியும் சுகமும் கிடைக்காமல் போய் விடுகிறது. பரமபிதா பரமாத்மாவுடன் இனியதொரு சந்திப்பும் ஏற்பட முடியாமல் உண்மையான சுகத்தையும், ஞான ஒளியையும், அருட்சக்தியையும் அடைய இயலாமல் தவிக்கின்றனர். கடவுளை வழிபட்டும் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மிகவும் அன்பான அந்தப் பரமபிதா பரமாத்மாவின் முழு அறிமுகமும் இங்கு தரப்பட்டுள்ளது. இவற்றை மக்களின் நலனுக்காக அவரே விளக்கிக் கூறியிருக் கிறார். அதை அனுபவத்தில் காண வைத்திருக்கிறார். அனுபவத்தில் காணுமாறு செய்தும் வருகிறார்.

பரமபிதா பரமாத்மாவின் பெயர் சிவன், சிவன் என்பதன் பொருள் கல்யாணகாரி, மங்களகாரி, பரமபிதா பரமாத்மாதான் ஞானக் கடல், சாந்திக்கடல், ஆனந்தக்கடல், அன்புக்கடல், அவரே தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபவர்; அனைத்து ஆத்மாக்களுக்கும் சாந்திலோகத்திற்கும், சுகலோகத் திற்கும் செல்வதற்கான வழியைக் காட்டுபவர். விகாரங் களிலிருந்தும் காலனிடமிருந்தும் விடுவிப்பவர். அனைவரின் பால் கருணை மிகக் கொண்டவர் அவர் ஒருவரே; அவரே திவ்ய புத்தியைக் கொடுப்பவர். திவ்ய திருஷ்டியையும் கொடுப்பவர்; மனித ஆத்மாக்களுக்கு ஞான மென்னும் சோமரசம் அல்லது அமிர்தத்தை அருந்தக் கொடுத்து அமர பதவி அடைவதற்கான வரங்களையும் அருளும் காரணத்தினால் அவர் பெயர் சோமநாதன் என்றும் அமரநாதன் என்றும் ஆயிற்று. அவர் ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டு விளங்குபவர். ஆகவே சதா முக்தன்; எப்போதும் ஒளிவீசிக் கொண்டுள்ள அணையாத விளக்கு அவரே, ஆகவே அவரே சதாசிவன்.

பரமபிதா பரமாத்மாவின் உருவம் ஜோதி பிந்துவாகும். ஜோதியின் சுடர் போன்ற உருவம், அவ்வுருவமோ நிர்மலமானது; செம்பொன் நிறமானது; மனதைக் கவரக்கூடியது. 

அந்த  சுந்தரத் திருவுருவத்தை திவ்வியமான கண்களால் அதாவது ஞானக்கண்களால் மட்டுமே காண முடியும்; திவ்யமான புத்தியில் தான் காண முடியும். ஜோதி பிந்துவான அந்த அழகுச்சுடரின் ஞாபக மாகவே அவரை சிவலிங்க வடிவத்தில் பூஜை செய்கிறார்கள்; அவர் அவதரித்த நாளை நினைக்கும் நாளாகவே சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.

எல்லா மதத்தினருமே பரமாத்மாவை நிராகாரி என்று மதிக்கிறார்கள்; ஏற்றுக் கொள்கிறார்கள். இவ்வார்த்தையால் அவர்கள் பரமாத்மாவுக்கு ஆகாரம் அதாவது உருவமே இல்லை என்று நினைக்கிறார்கள். அவ்வாறு உருவமே இல்லை என்று சொல்லுவது தவறு என்று பரமாத்மா சொல்லுகிறார். மனித சரீரமும் (ஸ்தூல)அவருக்கு இல்லை. சூட்சும தேவதைகளுக்கு இருப்பதைப் போல் சூட்சும சரீரமும் இல்லை. ஆகவே சரீரம் இல்லாதவர் அசரீரி ஜோதி வடிவானவர், அவர் அணு விலும் சிறிய அணு போன்றவர். இப்படி இருப்பதால் தான் அவர் ஒவ்வொரு அணுவிலும்  இருப்பதாகச் சொல்லிவிடுகிறார்கள்.

சகல ஆத்மாக்களுக்கும் தந்தை நிராகாரமான பரமாத்மா ஒருவரே!

இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் கிறிஸ்தவர்களும் ஒருவருக்கொருவர் சகோதரர் களே என்பதை எல்லோரும் அறிந்திருக்கின்ற னர்; ஆனால் எந்த விதத்தில் அவர்கள் சகோதரர் களாகிறார்கள் என்பதை அறியமாட்டார்கள். சகோதர சகோதரர்களானால் அவர்கள் அத்தனை பேருக்கும் தந்தை யார் என்பதையும் அறிய மாட்டார் கள். பெற்றோர்கள் தனித்தனியாக இருப்பதால் அவர்கள் சகோதரர்களாக முடியாது. ஆத்மீக அடிப்படையில் அவர்கள் அத்தனைபேரும் ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் ஆன படியால் அவர்கள் அத்தனை பேரும் சகோதர சகோதரர்கள், இங்ஙனம் ஆத்மீக உறவில் வாழ்ந்தால் நாட்டில் தேசீய ஒருமைப்பாடும் நிலவும்.

 

எல்லா மதத்தினருக்கும் பரமாத்மா ஒருவரே; அவர் எல்லோருக்குமே தந்தையானவர்; ஆகவே மனிதர்கள் அத்தனை பேரும் சகோதரர்கள் என்று சொல்கிறார்கள். எல்லோருமே ஏற்றுக் கொள்ளக் கூடிய அந்த மேலான பரமபிதா பரமாத்மா யார் என்பது தான் கேள்வி. மதங்களை ஏற்படுத்தி யுள்ளவர்கள் தனித்தனியானவர்கள் தான். இருப்பினும் அவர்களும் ஏதாவது ஒரு விதத்தில் நிராகாரியான ஜோதி சொரூபமான பரமாத்மா சிவபெருமானின் சின்னமான சிவலிங்கத்தை ஏதாவது ஒரு விதத்தில் மதிக்கத்தான் செய்கிறார் கள். பாரத நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் பரமாத்மா சிவபெருமானுக்குக் கோயில் இருக்கிறது. பக்தர்கள் ஓம் நம சிவாய, அம்மையும் அப்பனும் நீயே “தாயும் தந்தையும் நீயே” என்று புகழ்ந்து பாடி பூஜை செய்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இஷ்ட தெய்வம் சிவபெருமான்; அந்தத் தேவர்களுக்கும் மேலான தேவன் பரம பூஜ்யரான பரமாத்மா என்பது தெரிந்த விஷயம் தான். பாரத நாட்டிற்கு வெளியிலுள்ள வர்களும் சிவலிங்கத்தை மதித்து வருகிறார்கள். வணங்குகிறார்கள். படத்தில் சிவபெருமானின் நினைவுச் சின்னமானது எல்லா தர்மங்களிலும் உள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது. 

அமர்நாத், விஷ்வநாத், சோமநாத், பசுபதி நாத் போன்ற இடங்களில் கோயில் கொண்டுள்ள பரமபிதா பரமாத்மா சிவபெருமான் கோபேஷ் வரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஈஸ்வரனை வழிப்பட்ட தகாவும், ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமர் அந்த சர்வேஸ்வரனை வழிபட்டதாகவும் சொல்லப்படுவதால் ஸ்ரீ கிருஷ்ணரும், ஸ்ரீ ராமரும் பூஜிக்கத்தக்க தெய்வம் சிவபகவான் என்று தெரிகிறது. விக்கிரமாதித்த மகாராஜாவும் கூட சிவபிரானையே வணங்கினார். முகம்மதியர்களின் முக்கியமான தீர்த்த ஸ்தலம் மெக்கா; அங்கும் இதைப்போன்ற வடிவமுள்ள கல் ஒன்று உள்ளது. அதை அவர்கள் மிகுந்த அன்புடன் முத்தமிடுகின்றனர். அதை அவர்கள் சங்கே அஸ்வத் என்கிறார்கள். முகம்மதுவினால் அது ஸ்தாபிக்கப்பட்ட தாகவும் மதிக்கின்றனர். எந்த உருவ வழிபாட்டையும் ஏற்றுக்கொள்ளாத முகம்மதியர்களும் கூட இந்தக் கல்லை எதற்காக மதிக்கிறார்கள் என்ற விஷயம் தெரியாது. இத்தாலியைச் சேர்ந்த ரோமன் 

கத்தோலிக்கர்களும் கூட இதேவிதமான சின்னத்தை தமக்கே உரிய விதத்தில் பூஜிக்கிறார்கள்; கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஏசுகிறிஸ்துவும், சீக்கியதர்ம ஸ்தாபகரான குருநானக்கும் கூட பரமாத்மா ஒரு நிராகாரமான ஜோதி என்பதை ஏற்றுக் கொண்டிருக் கின்றனர். ஜெஹோவாவை பின்பற்றிச் செல்பவர்களும் உள்ளனர். ஜெஹோவாவும் சிவாவும் உச்சரிப்பிலும் ஒன்று போல் உள்ளன. ஜப்பானிலுள்ள புத்தமதத் தினரும் இது போன்ற ஒரு சின்னத்தை தங்கள் முன்னால் வைத்துக் கொண்டு அதைப்பார்த்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்கின்றனர்.

எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் சிவலிங்கம் என்பது மனித ஆத்மாக்களின் தந்தையாகிய பரமபிதாவின் ஞாபகச் சின்னம் என்பதை மறந்து விட்டிருக்கின்றனர். இவ்விஷயங்கள் தெரிந்திருந் தால் முகமதியர்கள் சோமநாதபுரக் கோயிலைக் கொள்ளையடித் திருக்க மாட்டார்கள்: பாரத நாட்டை பரமபிதா பரமாத்மா அவதாரம் செய்த பூமியாக உணர்ந்து இதையே தமது முக்கியமான தீர்த்த ஸ்தலமாகக் கருதி இருப்பர். இவ்வாறாக இவ்வுலகச் சரித்திரமே வேறு விதமாக இருந்திருக்கும். ஒரு தந்தையை மறந்த காரணத்தால் உலகில் சண்டை களும் சச்சரவுகளும் துன்பமும் கலகங்களும் பிணக்குகளும் அதிகமாகி எல்லோரும் அனாதை களாகி விட்டனர். பாரதமானது ஏழை நாடாகி விட்டது.

 பரமபிதா பரமாத்மாவும் அவருடைய சிரேஷ்ட காரியமும்

ஜோதிர்பிந்து சொரூபமான சிவபிரான் கலியுகக் கடைசியில், தர்மம் அழிந்துவிடும் சமயத்தில், உலக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற் காகவே முதன் முதலில் சூட்சும தேவதைகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரனைப் படைக்கிறார். ஆகவே அவருக்கு திரிமூர்த்தி என்று பெயர். மூன்று தேவதை களைப் படைத்த பிறகு தாமும் மனித உலகத்திற்கு இறங்கி வந்து சாதாரணமான வரும் வயோதிகரும், பக்தருமான ஒருவருடைய சரீரத்தில் அவதரித்து அவருக்கு பிரஜாபிதா பிரம்மா என்று பெயரிடுகிறார்.

பிரஜாபிதா பிரம்மாவின் மூலமாகத்தான் சிவபிரான் மனித ஆத்மாக்களுக்கு தந்தையாகவும், ஆசிரியராகவும் சத்குருவாகவும் இருந்து அன்பையும் அருளையும், ஞானத்தையும் கொடுத்து முக்தியையும், ஜீவன் முக்தியையும் அடையச் செய்கிறார்.

கலியுகக் கடைசியில் பிரஜாபிதா பிரம்மாவின் மூலமாக புதியதொரு சிருஷ்டியை ஏற்படுத்தும் போதே பழையதும், அசுரத்தன்மையும் நிறைந்த சிருஷ்டியின் அழிவையும் தொடங்கி விடுகிறார் பரமாத்மா சிவபிரான். சங்கரர் மூலமாக அமெரிக்கா வும், ஐரோப்பியர்களும் அணு ஆயுதங்களை அழிவிற்காகவே தயாரிப்பதற்கான தூண்டுதலையும் ஏற்படுத்துகிறார். இதைப்பற்றி மகாபாரதத்தில் பிரம்மா ஸ்திரங்கள் என்ற பெயரில் சொல்லப்பட்டிருக்கிறது. தேகப்பற்றும், தர்மத்திற்கு எதிர்மாறாக காரியங்களை செய்தலும் நிறைந்த விபரீத புத்தியைக் கொண்டர்வ களிடையே (மகா பாரதத்தில் சொல்லப்பட்டுள்ள கௌரவர்கள்) பரஸ்பர உள்நாட்டுக் கலகம் ஏற்படுமாறும் ஆணையிடுகிறார்.

விஷ்ணுவுக்கு இருக்கும் நான்கு புஜங்களில் இரண்டு புஜங்கள் ஸ்ரீ லக்ஷ்மிக்கு உரியன; இரண்டு புஜங்கள் ஸ்ரீ நாராயணருக்கு உரியன. தூய வார்த்தைகளைப் பேசுதல், ஞான ஒலியினை எழுப்புதல் என்பதை சங்கு விளக்குகிறது. 

சிருஷ்டி சக்கரத்தைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் தெரிந்து கொண்டிருப்பதை சுயதரிசன சக்கரம் காட்டுகிறது. இவ்வுலகமென்னும் நீரில் அல்லது சேற்றில் இருந்தாலும் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதுதான் தாமரை மலர்.  காமம், கோபம், பந்தபாசம், பேராசை, கர்வம் என்னும் பஞ்ச விகாரங்களை வெற்றி கொள்ள ஞான மென்னும் கதா யுதம் (ஆயுதம்) வேண்டும் என்பதையும் விஷ்ணு வின் அலங்கார ஆயுதங்கள் விளக்குகின்றன. மனித ஆத்மாக்களின் முன்னர் விஷ்ணுவை லட்சியப் பொருளாக வைத்து விஷ்ணுவின் அலங்காரங்களைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு அவற்றைத் தம்வாழ்வில் பின்பற்றுவதால் ஆண்கள் 

ஸ்ரீ நாராயணராகவும், பெண்கள்  ஸ்ரீ லட்சுமியாகவும் பதவியடைந்து, இரண்டு கிரீடமணிந்த தேவதா பதவியை அடைவார்கள் என்பதை பரமாத்மா விளக்குகிறார். இரண்டு கிரிடங்களில் ஒன்று தூய்மை யையும் சாந்தியையும் விளக்கும் ஒளிக் கிரீடம்; இரண்டாவது ரத்தினங்கள் பதிக்கப்பெற்ற தங்கத்தினால் ஆன கிரீடம் செல்வச் சிறப்புக்களை யும் அரசாட்சி செய்யப் பெறும் பாக்கியத்தையும் விளக்குகிறது.

இவ்வாறு, பரமபிதா பரமாத்மா சிவபிரான், சத்திய யுகத்திலும், திரேதாயுகத்திலும் வசிப்பதற்குத் தேவையான தூய்மையினைக் கற்பித்து தெய்வீக சம்ஸ்காரங்களின் மூலமாக சத்தியலோக மென்னும் சொர்க்கத்தை பாதுகாக்கிறார். எனவே சத்திய யுகத்தில் ஸ்ரீ லக்ஷ்மியும், ஸ்ரீ நாராயணரும் (பூர்வ ஜன்மத்தில் பிரஜாபிதா பிரம்மாவும், சரஸ்வதி யுமாவர்) சூரிய வம்சத்தைச் சேர்ந்த மற்ற ராஜாக் களும், பிரஜை களும் அமைவதற்கான முன்னோடி யான ஸ்தாபனை காரியங்களை இப்போதே செய்கிறார். திரேதாயுகத்தில் வரக்கூடிய ஸ்ரீ சீதையையும், ஸ்ரீ பரமபிதா பரமாத்மாவும் அவருடைய சிரேஷ்ட காரியமும்

ராமரையும் மற்ற சந்திர வம்ச ராஜாக்களையும் உருவாக்குகிறார். இவ்வாறு படைத்தல் – காத்தல் – அழித்தல் ஆகிய முக்காரியங்களையும் சிவபரமாத்மா செய்து வருகிறார். ஆகவே சிவபெருமானுடனும் பிரஜா பிதா பிரம்மாவுடனும் ஆத்மீக சம்பந்தம் கொண்டு தூய்மையடை வதற்கான ஆத்மீக முயற்சி செய்ய வேண்டும்; உண்மையான வைஷ்ணவர்களாகி, முக்தியையும், ஜீவன் முக்தியையும் அடைவதே ஈஸ்வரிய பிறப்புரிமை என்பதை அறிந்து முழு முயற்சியோடு ஈடுபட வேண்டும்.

பரமாத்மாவின் சிரேஷ்ட அவதாரம்

சிவன் என்னும் பெயருக்கு என்றும் நன்மையே செய்பவர் என்று பொருள்,  தர்மம் அழியும்போது, ஜீவாத்மாக்கள் பஞ்ச விகாரங்கள் என்னும் மாயையால் கவரப்பட்டு துன்பத்திலும் நிம்மதியில்லா மலும் பாவிகளாகவும் ஆகிவிடும் போது அவர்களை பூரண சுகம் நிறைந்தவர்களாக்கும் நன்மையான காரியம் செய்ய மனம் இரங்குவதால் அவரை கல்யாணகாரி என்கிறோம். பிரம்ம லோகத்தில் வசிப்பவர் சிவபெருமான். தர்மமும் சிரேஷ்ட கர்மமும் அழிந்துவிடும்போது அவற்றைக் காப்பதற்காகவும் கர்மங்களைப்பற்றி விளக்கிக் கூறுவதற்காகவும் பிரம்மலோகத்திலிருந்து கீழே இறங்கிவந்து ஒரு மனிதருடைய உடலைத் தன்னுடைய ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார். சிவபிரானின் இத்தகைய திவ்யமான பிறப்பைக் கொண்டாடும் ஒரு பண்டிகை தான் சிவஜெயந்தி. அதைத்தான் இன்றும் மக்கள் சிவராத்திரி என்று கொண்டாடுகிறார்கள்.

சாதாரண வயோதிகரின் உடலில் பரமாத்மா அவதரித்து அந்த வயோதிகரின் தூய மனமாற்றத் திற்குப் பிறகு அவருக்குப் பிரஜாபிதா பிரம்மா என்றும் பெயரிடுகிறார். பிரம்மாவைக் கொண்டாடும் பொருட்டு சிவலிங்கத்தின் முன்னர் சிவனுடைய வாகனமாக நந்தி வைக்கப்படுகிறது. சர்வ ஆத்மாக்களின் தந்தையாகவும் தாயாகவும் பரமாத்மா இருக்கும் காரணத்தினால் அவர் தாயின் கர்ப்பத்தில் பிறக்க மாட்டார்: பிரம்மாவின் உடலில் பரகாயப் பிரவேசம் செய்வதை தான் திவ்விய ஜன்மம் எனக்கூறுகிறோம்.

சிவபிரான் எல்லா ஆத்மாக்களுக்கும் தந்தையான காரணத்தினால் அவர் தாய் வயிற்றுப் பிள்ளையாகப் பிறப்பதில்லை. அவரே மனித சிருஷ்டிக்கெல்லாம் சைத்தன்யமான விதை யானவர்: ஜனன மரணம் இல்லாதவர் கர்ம பந்தனங்கள் ஏதும் அற்றவர். ஆனால் அவர் தன்னுடைய வாகனமாக அதாவது தன்னுடைய ரதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வயோதிகரோ பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில் வருபவர்: கர்ம பந்தனங்களையும் கொண்டவர் அவர் ஜீவாத்மா. ஆனால் பரமாத்மாவுக்கு தனக்கே உரியது என்று  சரீரம் எதுவும் எப்பொழுதுமே கிடையாது. 

உலகம் முழுவதுமே மாயையின் வலையில் விழுந்து கஷ்டப்படும்போது தூய்மை, சுகம், சாந்தி என்ற வரங்களைக் கொடுத்து, மாயை என்னும் கூட்டிலிருந்து விடுவிக்கின்றார். அவரே நேரில் வந்து ஞானத்தையும் யோகத்தையும் கற்பிக்கிறார். ஆத்மாக்களை பரந்தாமத்திற்கு அழைத்துச் சென்று முக்தியையும், ஜீவன் முக்தியையும் கொடுத் தருளுகிறார். சிவராத்திரி மாசி மாதத்தில் அதாவது விக்கிரம சகாப்தத்தில் கடைசி மாதத்தில் கொண்டாடப் படுகிறது. அப்போது கிருஷ்ண பக்ஷம். சதுர்த்தசி: அமாவாசையாக இருக்கும். இதற்குப் பின்னர் சுக்கிலபக்ஷம் தொடங்குகிறது. அதன் பிறகு புதிய சகாப்தம் தொடங்குகிறது. மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தசியைப் போல ஆத்மாக்களும் அஞ்ஞானம் என்னும் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன. விகாரங் களையும் அசுர லட்சணங்களையும் அடைந்த பின்னர் சிவ ஜெயந்தியினால் புதியதொரு கல்பம் தொடங்குகிறது. அஞ்ஞானத்திற்கும் துன்பத்திற்கும் முடிவு ஏற்பட்டு ஞானத்திற்கும் இன்பத்திற்கும் ஆரம்பயுகமாகின்றது.

சிவபிரான் தம்முடைய ஞானத்தினாலும் யோகத்தினாலும் ஆத்மாக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்குகிறார். இதை  விளக்கும் பொருட்டும் அதனைக் கொண்டாடும் பொருட்டும் மக்கள் சிவராத்திரியின் போது கண்விழிக்கிறார்கள். உபவாசம் (உப = அருகில்) (வாசம் = இருத்தல்) என்பதின் அர்த்தமே பரமாத்மாவின் அருகில் இருத்தல் என்பதாகும்.

அதாவது பரமாத்மாவின் நினைவில் இருத்தல் என்று பொருள்படும். ஆகவே பரமாத்மாவின் அன்பில் மூழ்க வேண்டுமாயின் தூய்மையென்ற விரதம் இருத்தல் வேண்டும்.