சிருஷ்டி என்னும் தலைகீழான மரமும் அதன் விதை வடிவமான பரமபிதாவும்

இவ்வுலக சிருஷ்டியைப் பரமாத்மா ஒரு தலை கீழான மரமாகச் சொல்லுகிறார். மற்ற மரங்களின் விதைகளை மண்ணில் விதைக்கிறார்கள்; மரம் மேல்நோக்கி வளர்கிறது. மனித சிருஷ்டி என்னும் மரத்தின் விதையான பரமபவித்திரமான பரமபிதா பரமாத்மா பரந்தாமத்தில்  இருக்கிறார்.

கலியுகத்தின் கடைசியும் சத்திய யுகத்தின் ஆரம்பமுமான சங்கமயுகத்தைப்பற்றி படத்தில் மரத்தின் அடியில் காட்டியிருக்கிறது. அங்கு வெள்ளை ஆடை அணிந்து பிரஜாபிதா பிரம்மா வும், ஜகதாம்பா சரஸ்வதியும் மற்ற சங்கமயுக பிராமணர்களும் சகஜராஜயோகம் செய்யும் தியானிக்கும்  நிலையில் அமர்ந்திருக்கிறார்கள். அஞ்ஞான இருள் சூழ்ந்த சமயத்தில் சிருஷ்டியின் மூல வித்தான பரமபிதா பரமாத்மாவும், ஞானக் கடலுமானவரான, சிவபெருமானுக்கு பவித்திர மானதொரு மனித சிருஷ்டியை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் காரணமாக காரணத்தால் பிரம்மா வின் சரீரத்தில் அவதாரம் செய்து அவருடைய கமலவாய் மூலமாக விலை மதிக்க  முடியாத கீதா ஞானத்தையும் சகஜ ராஜ யோகத்தையும் கற்பித்தார். அதன் படி நடந்த ஆண் – பெண்களுக்கு பவித்திரமான பிராமண பிராமணி களுக்கு சிவசக்திகள் என்று பெயர். இச்சிறிய யுகத்திற்கு லீப்யுகம் என்றும் புருஷோத்தமயுகம் என்றும் கீதா யுகம் என்றும் பெயர்.

சத்திய யுகத்தில்  ஸ்ரீ லட்சுமி நாராயணருடைய ஆனந்தமயமான, தடங்கல் ஏதுமில்லாத அசைக்க முடியாத ராஜ்யம் இருந்தது. அப்போது பாலாறும், நெய்யாறும் ஓடிற்று; (பாலுக்கும் நெய்யுக்கும்   சமமான சக்தியளிக்கும் தூய ஆறு) பசுவும் புலியும் ஒரே ஓடையில் நீர்குடித்தன. தூய்மை, மணி மகுடம் ஆகிய இரு கிரீடம் அணிந்தவர்கள் ஆட்சி செய்த நாடு பாரத நாடு. அப்போது மக்கள் நோயற்றவர்களாகவும், சுகம் நிறைந்தவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். காமம், குரோதம் போன்ற விகாரங் கள் இருக்கவில்லை. சண்டை யோ, சச்சரவுகளோ,  சாந்தியற்ற நிலைமையோ துன்பமோ அணுவளவுகூட இல்லை. அச்சமயத்து பாரதநாடு சொர்க்கம் என்றும் வைகுண்டம் என்றும் பஹிஸ்து சுகலோகம்) என்றும் சொல்லப்படுகிறது. 

எல்லோரும் ஜீவன் முக்தர் களாகவும் பூஜிக்கத் தகுந்தவர்களாகவும், 150 வருடத்திற்குக் குறையாத ஆயுள் உடையவர் களாகவும், தேவதாவர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணர் சூரிய வம்சத்தினர் அவர்களின் 8 வம்சாவளியினர் மகாராஜா மகாராணிகளாக இருந்தனர். அவர்கள் 1250 வருட காலத்திற்கு சக்கரவர்த்திகளாகத் திகழ்ந்தனர்.

திரேதா யுகத்தில் ஸ்ரீ சீதையும் ஸ்ரீ ராமரும் சந்திர வம்சத்தினராகவும் 14 சிறப்புக் கலைப் பெற்றவர் களாகவும் சம்பூர்ண நிர்விகாரிகளாகவும் இருந்தனர். இவர்களுடைய அரசாட்சியைப் பற்றி இன்றும் கூடப்பெருமையாகப் பேசி வருகிறார்கள்

சத்திய யுகத்திலும் திரேதா யுகத்திலும் இருந்த ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தின் வம்சமே மனித சிருஷ்டி என்னும் மரத்தின் அடிபாகமாகவும், மூலமரமாகவும் இருந்தது. அதன் பிறகு கிளைகள் என பல தர்மங்கள் கிளம்பின. துவாபர யுகத்தில் தேகப்பற்றும் காம, குரோதம் போன்ற விகாரங்களும் தலைகாட்டின. தெய்வீக சுபாவம் இருந்த இடத்தில் அசுர சுபாவங்கள் இருக்கத் தொடங்கின. அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே மனிதன் பூஜையையும், பக்தியையும் தொடங்கினான். முனிவர்கள் சாஸ்திரங்களை எழுதினர். யோகம், தவம் போன்றவைகள் தொடங்கின. கலியுகத்தில் மக்கள் பரமபிதா பரமாத்மா சிவனையும் மற்ற தேவதை களையும் பூஜை  செய்ததோடு, சூரியன், அரசமரம், அக்கினி, மற்ற ஜடதத்துவங்கள், போன்ற வற்றையும் பூஜிக்கத் தொடங்கினர். தேகப்பற்று முற்றிலும் அதிகரித்தது. விகாரம் மிகுந்தது. தூய்மையற்றவர் களாகி விட்டார்கள். உணவுப் பழக்கங்கள், எண்ணங்கள் நோக்கங்கள், மனம், சொல், செயல் இவை கீழானவைகளாகி விகாரங்களுக்கு அடிமையாகி விட்டான் மனிதன். கலியுகக் கடைசியில் மக்கள் தமோபிரதானம் என்னும் மிகத்தாழ்ந்த குண முள்ளவர்களாக, தீய அசுர குணமுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள். சாத்வீகம் நிறைந்த சத்யயுகம் திரேதாயுகம், இவற்றுடன் ஒப்பிட்டால் துவாபரயுகமும் கலியுகமும்  சிருஷ்டியின் நரகமாகும்.

பிரபுவைச் சந்திப்பதற்கான இனிமையானயுகம் – சங்கமயுகம்

பாரதத்தில் பல பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படும் போது புருஷோத்தம மாதம் (மார்கழி) என்றும் ஒன்றை புனிதமாகக் கருதி  கொண்டாடுகிறார்கள். ஆத்மீக ஞானத்தைக் கேட்கிறார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குப் போகிறார்கள். தான தர்மங்களையும் அம்மாதத்தில் தான் செய்கிறார்கள். அமிர்தவேளையில் எழுந்து நீராடுதலே மிக புண்ணியத்தைக் கொடுக்கும் என்றும் நினைக்கிறார்கள்.

புருஷோத்தமன் என்ற பெயர் பரமபிதா சிவபெருமானுக்கே பொருந்தும். ஆத்மாவின் மறுபெயர் புருஷன் என்பது அவரே பரமாத்மா – பரம புருஷன் அல்லது புருஷோத்தமன் ஆவார். ஏனெனில் ஞானத்திலும், சாந்தியிலும், தூய்மை யிலும், சக்தியிலும் அவர் உத்தமமானவர். கலியுகக் கடைசியும் சத்தியுக ஆரம்பமும் சேர்ந்த சங்கம யுகத்தின் ஞாபகார்த்த காலம் தான் புருஷோத்தம மாதம். ஏனெனில் பரமபிதா பரமாத்மா அவதரிக்கிற சமயம் அதுதான். சத்யுக ஆரம்பத்திலிருந்து தொடங்கிக் கலியுகக் கடைசி  வரையில் ஜீவாத்மாக்கள் ஜனனலிமரணத்தில் வருவார்கள். கலியுகக் கடைசியில் சத்தியமான தர்மத்தை மறுபடியும் நிலைநாட்டுவதற் காக பரமபிதா பரமாத்மா வந்து அவதாரம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஞானத்தையும், யோகத்தையும் ஜீவாத்மாக் களுக்குச் சொல்லிக் கொடுத்து, முக்தி தாமத்திற்கு அல்லது பிரம்ம லோகத்திற்கு அழைத்துச் செல்கிறார். மற்ற ஆத்மாக்களையும் மகா அழிவுக்குப்பின் அசரீரிகளாக்கி முக்தி தாமத்திற்குக் கொண்டு போகிறார். ஞான மென்னும் கங்கையில் ஆத்மாக் கள் குளித்து சிவபுரிக்கு யாத்திரை போகின்றன. இந்த ரகசியங்களை அறிந்து கொள்ளாமல் மக்கள் சிவபெருமானுடைய கோவிலுக்கோ, அல்லது விஷ்ணுவின் கோவிலுக்கோ போகிறார்கள். புருஷோத்தம மாதத்தில் பஞ்ச விகாரங்களை நீக்கி விடுவதால் அவர்கள் உத்தம குணம் நிறைந்து மரியாதையும் மதிப்பும் மிக்கவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு சத்யயுகம் அல்லது தேவயுகம் அல்லது கிருதயுகம் தொடங்குகிறது. 

மக்கள் காமம், கோபம், மோகம், பேராசை கர்வம் என்ற இந்தப் பஞ்ச விகாரங்களை தானம் செய்து  ஞானமென்னும் கங்கையில் தினமும் நீராடி யோகத்தினால் சரீரத்திலிருந்து அப்பாற்பட்டு உண்மையான யாத்திரை செய்தால் இவ்வுலகில் மறுபடியும் பரிபூரண சுகமும் சாந்தியும் நிறையும்; சம்பூரணமான சொர்க்கம் என்னும் இராம ராஜ்யம் மறுபடியும் ஸ்தாபனை ஆகும். மக்கள் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குப் போவார்கள். படத்தில் கூட இவ்விஷயம்தான் விளக்கப் பட்டிருக்கிறது.

பிரஜாபிதா பிரம்மாவும் சரஸ்வதியும் அவர் கமலத் திருவாயின் மூலம் (ஞானப்பிறவி) பிறந்த பிராமண வம்சமும் பரமபிதா பரமாத்மாவுடன் யோகத்தினால் தொடர்பு கொண்டிருப்பது படத்தில் விளக்கப்பட்டிருக் கிறது. இந்த இராஜயோகத்தின் மூலமாகத்தான் மனதிலுள்ள மாசுகள் நீங்கும்; செய்த தீவினைகள் அகலும். சமஸ்காரங்கள் சதோபிரதானமாக மாறும் இவ்வுலக நரகத்தில் வசிக்கும் ஆணும், பெண்ணும் ஞானம், யோகம் என்ற தீ மூட்டி அதில் காமம், குரோதம், மோகம், லோபம், அகங்காரம் என்பவற்றை தீயில் போட வேண்டிய பொருட்களாகப் போட்டு, வேள்வி அல்லது யாகம் வளர்ப்பதைப் படத்தில் பார்க்கிறீர்கள். இம்மகா புனித வேள்வியின் மூலமே மனிதர்கள் என்ற நிலையிலிருந்து  தேவர்களாகி  அதாவது ஒவ்வொரு ஆணும் ஸ்ரீ நாராணயராகவும் ஒவ்வொரு பெண்ணும் ஸ்ரீ லட்சுமியாகவும் ஆகி சுகம் நிறைந்த வைகுண்டத்திற்கு அல்லது சொர்க்கத் திற்குப் போகிறார்கள். சொர்க்கத்தின் அதிபதிகளாகவும் ஆகிறார்கள்.

இப்போது நடந்து கொண்டிருப்பது சங்கமயுகம் என்பது நினைவிருக்கட்டும். அது முடிந்தவுடன் கலியுகத்திலுள்ள சிருஷ்டியில் சொர்க்கம் மலரும். இன்ப உலகமாக மாறும். ஆகவே நாமெல்லோரும் தூய்மையுடனிருந்து ஆண்டவனை இடைவிடாமல் நினைக்கும் யோகிகளாக மாற வேண்டும்.

மனிதர்களின் 84 பிறவிகளின் அற்புதமான கதை

ஒரு கல்பத்தில் ஒரு ஜீவாத்மாவானது அதிக பட்சமாக 84 ஜன்மங்களை எடுக்கும்; ஆனால் 84 லட்சம் ஜீவராசிகளாகப் பிறக்காது. ஜீவாத்மாக் களின் 84 ஜன்மங்களின் சக்கரத்தைப்பற்றி இந்த படத்தில் 84 படிகளின் மூலமாக விளக்கப்பட்டிருக் கிறது. பிரஜாபிதா பிரம்மாவும் சரஸ்வதியுமே மனித சமூகத்திற்கு முதல் தந்தையும், முதல் தாயும் ஆவார் கள். அவர்களுடைய 84 ஜன்மங்களைப் பற்றித் தெரிந்து கொண்டோமேயானால் அத்தனை ஜீவாத்மாக் களின் கதையையும் தெரிந்து கொண்டாற் போல ஆகிவிடும். பிரஜாபிதா பிரம்மாவும் சரஸ்வதியும் சங்கமயுகத்தில் ஈஸ்வரிய ஞானத்தையும் யோகத்தை யும் கற்று முதன்மையாகத் தேர்ந்ததாலேயே சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீநாராயணராகவும் ஸ்ரீலட்சுமியாகவும் பதவி அடை கிறார்கள் என்பதை ஏற்கனவே இதற்கு முன்னரும் விளக்கி இருக்கிறோம்.

சத்தியயுகத்தில் ஸ்ரீ லட்சுமி ஸ்ரீ நாராயணனும் 1250 வருட காலத்தில் 100 சதவீத சுகத்தையும் சாந்தியையும் பரிபூரணமாக அடைந்து 8 ஜன்மங் கள்  எடுக்கிறார்கள். இதனால் தான் 8 என்ற எண் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 8 மணிகள் கொண்ட ஜபமாலையை வைத்துக் கொள்கிறார்கள். 8 தேவதை களின் பூஜையையும் செய்கிறார்கள். பூஜிக்கத் தகுந்தவர்களாக இருக்கும் இந்த 8 நாராயணீய ஜன்மங்களைப் பற்றி 8 படிகளினால் படத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. திரேதாயுகத்தில் 1250 வருடங்களில் 14 சிறப்புக்களைக் கொண்ட ஸ்ரீ சீதா ஸ்ரீ ராமர் ஆட்சியில் சந்திர வம்சத்தில் பூஜிக்கத் தகுந்த மதிப்பு கொண்ட ராஜாலிராணியாகவும், அதாவது உயர்ந்த அந்தஸ்தைக் கொண்ட பிரஜைகளாகப் பிறந்து 12 ஜென்மங்கள் எடுக்கிறார்கள். இப்படி ஆரம்பத்தில் சத்திய யுகத்திலும் திரேதாயுகத்திலுமாக 2500 வருடங்களில் பரிபூரணமான தூய்மை, சுகம்,  சாந்தியுடன் நோயற்ற வாழ்வையும் பெற்று, சங்கமயுக ஞானப் பிறவியையும் சேர்த்து 21 ஜன்மத்திற்கான சுகம் சாந்தியையும் செல்வத்தையும் அடைகிறார் என்று இதனால் தான் சொல்கிறார்கள்.

சுகத்தை அடைவதற்கான பாக்கியம் தீர்ந்து போய்விட்ட பிறகு அவர்கள் துவாபரயுகத்தின் ஆரம்பத்தில் பூஜாரிகளாக மாறுகிறார்கள்.  முதன் முதலில் பரமபிதா பரமாத்மா சிவபெருமானை வழிப் பட, வைரத்தினால் சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜிக்கத் தொடங்குகிறார்கள். மிகுந்த பக்தியுடன் மகாராஜா விக்ரமாதித்தர், பூஜாரியாக நின்று சிவபூஜை செய்வதை படம் விளக்குகிறது. நாளடைவில் சூட்சும தேவதைகளான விஷ்ணு, சங்கரர் போன்ற தேவதைகளையும் பூஜிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆத்மாவைப் பற்றிய மறதியின் காரணமாக நாட்கள் செல்லச் செல்ல  அவர்களுடைய ஆரம்ப நிலையான ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணரையே பூஜை செய்யத் தொடங்கு கிறார்கள். பூஜிக்கத்தகுந்தவர்களாக இருந்த பூஜ்யர்கள் தாமாகவே தம்மைப் பூஜை செய்து கொள்ளத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதன் பிறகு கலியுகம் தொடங்கிற்று. சூட்சம லோகத் தையும் சத்தியலோகத்தையும் சேர்ந்த தேவி – தேவர்களைப் பூஜை செய்ததோடு தத்துவங்களின் பூஜையும் தொடங்கிற்று. இவ்வாறு பக்தியும் பலவித மாயிற்று. சிருஷ்டியானது தமோ பிரதானமாகிவிட்டது. அதாவது சூத்திர கட்டத்தை அடைந்துவிட்டது. இச்சமயத்தில் காமம், குரோதம், மோகம், லோபம் அகங்காரம் என்பது உச்சக் கட்டத்தில் பரவத் தொடங்கிற்று. கலியுகக் கடைசி வரையில் அவர்களும் அவர்களைச் சேர்ந்த வம்சத்தினரும் 63 ஜன்மங்கள் எடுத்தார்கள்.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து தெரிவது என்னவென்றால் 5000 வருடங்களில் அவர் களுடைய ஆத்மாவானது 84 ஜன்மங்கள் எடுக்கிறது என்பதே. இப்பழைய, தூய்மையற்ற உலகத்தில் 83 ஜென்மங்களை எடுத்தாகிவிட்டது. இப்போது அவர்களுடைய 84வது கடைசி ஜன்மத்தில் வானப்பிரஸ்தம் எனப்படும் நிலையில் பரமபிதா பரமாத்மா சிவபகவான் அவருடைய பெயரை பிரஜாபிதா பிரம்மா என்றும் அவருடைய கமலத்திரு வாயிலிருந்து  வெளியான ஞானத்தினடிப் படையிலான தெய்வீக வாழ்வைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிறந்த முதல் கன்னிப் பெண்ணின் பெயரை ஜெகதம்பா சரஸ்வதி என்றும் வைத்தார். தேவதா வம்சத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் எல்லோருமே அதிக பட்சமாக 84 ஜன்மங்களை எடுப்பர். ஜனன மரண சக்கரத்தை 84 ஜன்ம சக்கரம் என்றும், தேவிகள் பலரின் கோவிலில் 84 மணிகள் கொண்ட தேவி என்ற பெயரிலும் இது புகழப்படுகிறது. 

சிருஷ்டி நாடகத்தை ஏற்படுத்தியவர் யார்?

இயற்கையும் ஆத்மாவும் இணைந்து நடிக்கும் அனாதியான மனித சிருஷ்டியே ஒரு நாடகம் இதைத் தெரிந்து கொள்வதால் ஒரு ஜீவாத்மா வானது அளவுக்கப்பாற்பட்ட ஆனந்தமடையும். சுவஸ்திக் சின்னமானது சிருஷ்டி சக்கரத்தைச் சரியாக 4 சம பாகங்களாகப் பிரிக்கிறது. அவைகள் சத்தியயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகமாகும்.

சிருஷ்டி நாடகத்தில் நடிப்பதற்காக ஒவ்வொரு ஆத்மாவும் அது வரவேண்டிய சமயத்தில் பரந்தாமத்திலிருந்து இவ்வுலக நாடக மேடைக்கு வருகிறது. முதன் முதலில் சத்யுகம் திரேதாயுகத் தின் அழகான காட்சி வருகிறது. இவ்விருயுகங் களிலும் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தின் வம்சத்தைச் சேர்ந்த ஜீவாத்மாக்கள் நடிக்கும். மற்ற தர்மங்களைச் சேர்ந்த ஆத்மாக்கள் பரந்தாமத் திலேயே இருந்துவிடும். தங்கள் தூய்மைக்குத் தகுந்தாற்போல இவ்விருவம்சத்தைச் சேர்ந்த வர்கள் வரிசைக்கிரமமாக வருவார்கள். ஆகவே இவர்கள் கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையுடனும், நட்பு நிறைந்த சுபாவ முள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

துவாபரயுகத்தில் இதே தர்மமானது ரஜோ குணமுள்ளதாகிவிடுவதால் இப்ராஹிம் மூலமாக இஸ்லாமிய தர்மமும், புத்தரின் மூலமாக பௌத்த தர்மமும், இயேசு மூலமாக கிறிஸ்தவ தர்மமும் ஸ்தாபனை ஆகிறது. இந்த நான்கு தர்மங்களைச் சேர்ந்தவர்களே முக்கியமான நாடகப்பாத்திரம் வகிப்பவர்கள். இவர்களைத் தவிர சந்நியாச தர்மத்தை ஏற்படுத்திய சங்கராச்சாரியார், முகம்மதிய தர்மத்தைச் சேர்ந்த முகம்மது, மேலும் சீக்கிய தர்மத்தைச் சேர்ந்த குருநானக் போன்றவர் கள் இவ்வுலக நாடக நடிகர்களில் முக்கியமான நாடக பாத்திரங்களாவர். ஆனாலும் முதலில் கூறிய நான்கு பேர்கள் நடத்தும் நாடகப் பாத்திரமே உலக நாடகத்திற்கு ஆதாரமாகும். பல மதங்களின் காரணமாகவே துவாபர யுகத்திலும் கலியுகத்திலும் இச்சிருஷ்டியில் ஒற்றுமையின் மையும், சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு அதனால் துன்பம் அதிகமாகிறது.

கலியுகக் கடைசியில், தர்மம் அழிந்து போன நிலையில் அதாவது மிகப்பழைய தர்மமான ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் அழிந்துவிட்ட நிலையிலும் ஜீவாத்மாக்கள் பதீதமாகிவிட்ட காலத்திலும் இச்சிருஷ்டியைப் படைத்தவரும், இயக்குநருமான பரமபிதா பரமாத்மா சிவ பெருமான் பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில் அவதாரம் செய்கிறார். பிரஜாபிதா பிரம்மாவின் கமலத்திருவாய் மூலமாகப் பிறந்த கன்னிப் பெண் பிரம்மா குமாரி சரஸ்வதியையும், மற்ற பிராமணர் களையும் படைக்கிறார். பிரஜாபிதா பிரம்மாவையும் சரஸ்வதியையும் அலௌகீக தாய் தந்தையின் ரூபத்தில் சந்திக்கின்றோம். அவர்களின் மூலமாக ஞானத்தைக் கொடுத்து  வழிகாட்டி முக்தி  ஜீவன் முக்தி என்பது நமது பிறப்புரிமை என்பதையும் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். ஆதாம்லிஏவாள் என்பவர்களும் அதம்லிஅவ்வா என்பவர்களும் பிரம்மா சரஸ்வதியே ஆவார்கள். அவர்கள் மூலமாகத்தான் பரமபிதா பரமாத்மா தாமாகவே இப்பூலோகத்தில் சொர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். 

கலியுகக் கடைசிக்கும் சத்யுக ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட இக்குறுகிய சங்கமயுகம் பரமாத்மா அவதாரம் செய்யும் காரணத்தால் மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும்.

உலகச் சரித்திரமும் பூகோளமும் மறுபடியும் தொடங்குகிறது. கலியுகக் கடைசியில் பரமாத்மா சங்கரர் மூலமாக இப்பழைய உலகத்தை அழித்து விடுகிறார். அப்போது எல்லா ஆத்மாக்களும் தமக்குப் பிரியமான பிரம்மலோகத்திற்குச் செல் கின்றன. அதன் பிறகு ஆத்மாக்கள் தமது தூய்மைக்கு ஏற்றபடி சத்திய லோகத்தில் பிறந்து ஆதிசனாதன தேவிலிதேவதா தர்மத்தைப் பின்பற்றி வாழ்கின்றன. 2500 ஆண்டுகளுக்குப் பிறகு துவாபரயுக ஆரம்பத்தில் இப்ராஹிம் ஸ்தாபிக்கும் இஸ்லாமிய தர்மத்தைச் சேர்ந்தவர்களும், புத்த தர்மத்தைச் சேர்ந்தவர்களும், கிறிஸ்தவ தர்மத்தைச் சேர்ந்தவர்களும் தத்தமது சமயத்தில் சிருஷ்டி என்னும் நாடகமேடையில் வந்து ஏற்கனவே நிச்ச யிக்கப்பட்ட தங்கள் நாடகப் பாத்திரத்தை வகிப்பார்கள். தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, போன்ற உலோகங்களை ஒத்த நான்கு கட்டங்களை யும் கடப்பார்கள். அனாதியாக நிச்சயிக்கப்பட்டு விட்ட இந்த சிருஷ்டி நாடகமானது அனாதி காலம் தொட்டு ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒரு முறை இதே போலவே திரும்பத் திரும்ப நடை பெறுகிறது.