கர்மம் (செயல்) மற்றும் யோகம்

கர்மா விதியின் அறிமுகம்:
கர்மா என்றால், செயல் என்று பொருள். இந்த எல்லையற்ற உலக நாடக மேடையில் நாம் அனைவரும் நடிகர்கள். இந்த கர்மஷேத்திரத்துக்கு நாம் வந்து, செயலாற்றி, அவற்றின் பலன்களை நாம் அனுபவிக்கவேண்டும் என்பது நியதி. உணர்ச்சிகளை வெளி யிடுவது மற்றும் அனுபவம் செய்வதுதான் வாழ்க்கை என்பதாகும். வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்கிற பழமொழி ஒன்று உண்டு. நியூட்டனின் செயல்பாட்டு விதியாவது; ஒவ்வொரு செயலுக்கும், அதே அளவான மற்றும் எதிர்மறையான செயல் இருக்கும் என்பதே. இது ஸ்தூல செயல்களுக்கு பொருந்தும். ஒருவர் ஆஸ்திகராக அல்லது நாஸ்திகராக இருந்தாலும், ஒரு செயலானது நல்லதா அல்லது தீயதா என்பதை நிச்சயமாக உணர்ந்திருப்பார். எந்த ஒரு செயலும் தார்மீக ரீதியில் நல்லதாகவே இருக்கவேண்டும் என்று பெறும்பாலோர் விரும்புகின்றனர். மேலும் நமக்குள்ளேயே ஒரு நீதிபதி இருக்கிறார்!

அதுதான் நமது உள் மனம். ஏதாவது ஒரு தவறான செயலைச்செய்ய நாம் முற்படும் போது, அது சரியல்ல என அந்த உள் மனம் சுட்டிக் காட்டிவருவதை நாம் அனைவரும் அறிவோம். நாம் அமைதியாக, சுகமாக இருக்க வேண்டும் என்பதே நமது செயலுக்கு ஆதாரம் ஆகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டுள்ள ஒரு மனித சமுதாயம் அமைய வேண்டும் என்பதே அனைவரின் ஆசை ஆகும். ஆனால். நடைமுறையில் இது அசாத்தியமானதாக உணரப்பட்டுவருகிறது. இந்த உலகத்தைப் பற்றி நாம் நன்கு அறிந்திருந்தும், அதை சிறந்த வழியில் கொண்டு செலுத்தும் முறையை அறியாமல், நாம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறோம். பல தர்மங்கள் (மதங்கள்) பல கோட்பாடுகளுடன் இருப்பதால், மனிதர்களின் கருத்துக் களிடையில் முரண்பாடு காணப்படுகிறது. ஒரு தர்மம் மற்றொரு தர்மத்தின்மீது தன் கோட்பாடுகளை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதினால், பல போர்கள் ஏற்பட்டு மனிதர்களை ரத்தம் சிந்த வைக்கிறது. சட்டம் ஒழுங்கு, மற்றும் சமூகத்தின் பழக்க வழக்கங்கள் குறுகிய நோக்குடன் செயல்படுவதால், உலகில் அமைதியை ஏற்படுத்த இயலவில்லை. எந்த ஒன்றையும் சரியானதா அல்லது தவறானதா என்று நிர்ணயித்து அதன்படி நடக்கும் சுதந்திரத்தை தனிமனிதனிட மிருந்து, ஒரு சமுதாயம் பறிக்க முற்படும்போது எவ்வாறு அமைதி நிலவமுடியும்? ஆகவே ஒரு செயலை அது சரியானதா அல்லது தவறானதா என எவ்வாறு நிர்ணயம் செய்யமுடியும் என்கிற கேள்விக்குப் பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஏன் என்றால். பலவேறு வகையான சமுதாயம், நாகரீகம், மதம் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக நடக்கவேண்டும் என வலி யுறுத்துகின்றன. இதனால் மிகுந்த கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன.

ஆகவே மனிதன் உயர்ந்த கல்வி எது? எந்தச் செயல்கள்நம்மை பந்தனங்களிலிருந்து விடுவிக்கின்றன? பாவம் எது? புண்ணியம் எது? எது நம்மை கடவுளின் அருகாமையில் கொண்டு செல்கிறது? எது அவரை விட்டு விலகிச் செல்லவைக்கிறது? என்கிற கேள்விகளுக்குப் பதில் கூறும்போது, குழப்பம் ஏற்படுகிறது. ஏன் எனில் பலர் பலவிதமான பதில்களை அளிக்கின்றனர். ஆகவே கர்மாவின் விதிகளை நன்கு உணருவது மிக அவசியம். இந்த விதிமுறை சகல தர்மத்தினருக்கும், எல்லா சமுதாயங்களுக்கும் பொருந்துவதாக அமையவேண்டும். மேலும் மனிதர்களிடையே எழும் பல கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாக இருக்கவேண்டும் உதாரணமாக, சிலர் செல்வந்தர்களாகவும் மற்றவர்கள் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிலர் அங்கஹீனர்களாக (உடல் உறுப்புகள் குறைபாடுடையவர்கள்) பிறவி எடுக்கின்றனர்? சாதாரண புத்தியுடையவர் ஏன் உயர் அந்தஸ்தை அடைகிறார்?

கர்மவிதி பற்றியும் நன்கு உணர்ந்துள்ளார். ஆகவே, தான் விழிப்புணர்ச்சி அடைவதற்காக கர்மாக்கள் செய்வதைத் துறந்து, தாம் சமுதாயத் திற்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யாமல், காட்டிற்கு அல்லது ஒரு குகைக்குச் செல்ல வேண்டியதில்லை; தன் இல்லறத்திலேயே இந்த சமூகத்திலேயே இருந்துவந்து, தன் பூர்வ கர்மாக்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக மற்ற ஆத்மாக்களின் தொடர்பில் இருந்துவருவது மிக அவசியம் என்பதையும் அறிவார். இவர் பரமாத்மாவிடமிருந்து இராஜயோகத்தால் தான் அடைந்துவருகின்ற அமைதி, சுகம், ஆனந்தம், ஆகியவற்றை மற்றவர்களும் அடைந்து நன்மை பெறவேண்டும் என்கிற பரந்த உள்ளம் கொண்டுள்ள பரோபகாரியாக விளங்குவதால், இந்த சமுதாயத்திலேயே பற்றற்றும் அன்புடனும் இருந்து தனது கடைமை களைத் தவறாது தமது குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும், இந்த உலகிற்கும், செய்துவருகிறார். கர்மவிதியை உணர்ந்திருப்பதால், தனது மனம், சொல், அல்லது செயல் மூலமாக எவருக்கும் துக்கம் அளிக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார். 

மேலும் தான் இப்போது அனுபவம் செய்ய நேர்கின்ற துக்கத்திற்கு மற்ற எந்த ஒரு ஆத்மாவும் பொறுப்பு அல்ல; தனது ஊழ்வினைதான் இதன் காரணம் என்பதால், தனக்கு துக்கத்தை ஏற்படுத்தக் கருவியாக வருகின்ற ஆத்மாவின் மீது எந்த பழியும் சுமத்தாமல், அந்த ஆத்மாவின் உதவியால் தன் பழைய கர்மக் கணக்கு முடிவடைந்து வருகிறது என சந்தோஷம் அடைந்து, அந்த ஆத்மாவுக்கு மனதாற நன்றி கூறிவருவார்; அந்த ஆத்மாவும் தன்னைப் போல பரமாத்மா விடமிருந்து, நன்மைகளை அடையவேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையுடன் இருப்பார். இந்த விழிப்புணர்ச்சியின் காரணமாக எந்த ஒரு துன்பமோ, அல்லது பிரச்சனையோ ஒரு யோகியை நிலை குலையச் செய்வதில்லை. மாறாக அவர் அமைதி காத்து, தமது ஆத்ம சக்தியின் மூலமாக, அந்த துன்பத்தை நீக்குவதற்கு, பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழி காண்கிறார்.

இவ்வாறே யோகி உடல்ரீதியாக நோய்நொடியை அனுபவம் செய்யும்போதும் அதன் காரணமாக அவருடைய உடல் வலியை அனுபவம் செய்தாலும், இதுவும் ஒரு வகையில் பெற்றோர், சமுதாயம், செல்வம், ஆரோக்கியம், என பற்பல அனுபவங்களை இப்போது அடைந்துவருகிறது. இந்த வேறுபட்ட சூழ்நிலைகளின் காரணம் அந்த ஆத்மாவின் கடந்த பிறவிகளில் செய்துவந்த செயல்களின் பலன்தான். இதை ஊழ்வினை என்று கூறலாம். முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும் என்கிற பழமொழி இதைச் சுருக்கமாக எடுத்துக்கூறுகிறது. இதனால், இப்போது நான் துக்கத்தை அனுபவம் செய்தால், இதன் காரணம் எனது முந்தைய செயல்தான் ஆகிறது. ஆகவே நான் மற்றவர்மீது பழி சுமத்தமுடியாது. இதை நான் அனுபவித்தே ஆகவேண்டும். இது கர்மவிதி. இதை உணராமல், நான் உடல் உணர்வின் காரணமாக, எனக்கு துக்கம் தந்தவரைப் பழிதீர்க்க முற்பட்டால், அது என் கர்மக் கணக்கை அதிகரித்து, மேலும் எனது துக்கத்தை அதிகரிக்கும். இது மிக ஆழமான கர்ம சித்தாந்தம். இதை அறியாததால்தான் மனிதர்கள் தமது துக்கத்தை அதிகரித்து வருகின்றனர். தமது மன அமைதியையும் இழந்து வருகின்றனர்.

ஆகவே உடல் உணர்வின் காரணமாக நான் எனது மனம், சொல், அல்லது செயல் மூலமாக எவருக்காவது இப்போது நான் துக்கத்தை அளித்தால், இதன் பலனாக நான் ஏதாவது ஒரு வழியில் துக்கத்தை நிச்சயமாக அனுபவித்தே ஆகவேண்டும். இது சிலநாட்கள், சில ஆண்டுகள், அல்லது அடுத்த பிறவியில் நிகழலாம். ஆகவே நாம் இப்போது அனுபவிக்க நேர்கின்ற துக்கத்தைப் பார்த்து ஏன், எப்படி, எவ்வாறு என்கிற கேள்விகளைக் கேட்டு குழப்பம் அடைய வேண்டியதில்லை. இவை அனைத்திற்கும் நான்தான் பொறுப்பு என்று உணர்ந்து மென்மேலும் கர்மக்கணக்கை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதே எனது கடமையாகும். யோகி எவ்வாறு செயலாற்றுகிறார்? இராஜயோகி என்பவர் நிரந்தரமாக சகல நற்குணங்களாலும் நிறைந்துள்ள பரமாத்மாவுடன் சதா தனது மன எண்ணங்களின் மூலமாகத் தொடர்பு கொண்டிருப்பவர் ஆவார். இத்துடன் எனது

அதே நேரத்தில் புத்தி கூர்மையுடையவர் ஏன் தோல்வியை தொடர்ந்து தழுவி வருகிறார்? இந்த அநீதி ஏன் என கூக்குரலிடும் குரல்கள் பல. ஏன்? எப்படி? எவ்வாறு? என்கிற வினாக்கள் தான் மன இருக்கத்திற்கான காரணமாகின்றன. கர்ம விதிகளை அறியாததே இக்கேள்விகளுக்கான ஆதாரம் ஆகும். இவற்றை சரிவர ஒருவர் புரிந்துகொள்ளவேண்டுமானால், முதலில் ஆத்மா எவ்வாறு செயலாற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஆத்மாவின் 3 சூட்சும அங்கங்களான மனம், புத்தி, மற்றும் சமஸ்காரம் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது தான், ஒரு காரியம் அல்லது கர்மா நடைபெறுகிறது. இந்த ஒரு காரியம் ஒரு சமஸ்காரத்தை ஆத்மாவில் உருவாக்குகிறது. பிறகு இதன் அடிப்படையில் தான் ஆத்மாவின் எண்ணங்கள் உருவாகின்றன. இவற்றின் ஆதாரத்தில் செயல் நடைபெறுகிறது. இது மீண்டும் ஒரு சமஸ்காரத்தை உருவாக்குகிறது. 

இவ்வாறு சக்கரம் சுழன்று வருகிறது. ஆகவே எனது கடந்த காலத்தின் எண்ணம், செயல், சமஸ்காரம் ஒரு பழக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில் தான் எனது நிகழ்காலம் மற்றும் எதிர்காலச் செயல்கள் அமையும். எந்த ஒரு சூழ்நிலையிலும், எனது சமஸ்காரத்தின் அடிப்படையில் தான், என் எண்ணங்கள் உருவாகும். முன்பு ஒரு முறை நான் நெருப்பினால் பாதிக்கப்பட்டிருந்தால், வெகு தொலைவிலேயே மீண்டும் அந்த நெருப்பைக் காண நேர்ந்தால், அதை விட்டு அகன்று சென்றுவிடவேண்டும் என்கிற எண்ணமே எனது மனதில் தோன்றும். இது செயலாக மாறும்போது நான் அந்த இடத்தை விட்டு அகன்று செல்ல என் கால்களுக்கு உத்திர விடுகின்றேன். ஒவ்வொரு செயலும் எனது பழைய அனுபவத்தின் ஆதாரத்தில் தான் நடைபெறுகிறது என்பதை நான் உணரும் போது ஏன்? என்கிற கேள்வியே எழாது. அந்தச் சூழ்நிலை உருவாகு வதற்கு நான்தான் காரணம் என்று எண்ணும் போது அதற்கான விடை கிடைத்துவிடுகிறது. இப்போது மறுபிறவியின் ரகசியத்தையும் நான் அறிகின்றேன். ஒவ்வொரு ஆத்மாவும் வெவ்வேறு உடலை ஆதாரமாக எடுத்து, ஆண் அல்லது பெண்ணாக, வெவ்வேறு

தன் கணக்குகளைத் தீர்த்து வருகிறது என்பதை அறிந்து அவருடைய மனம் சதா குஷியுடன் இருந்துவரும். இவ்வாறே தன் கட்டுப்பாட்டிற்கு அப்பால் ஏற்படும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் ஏற்படும் பேரழிவுகளைக் காணும்போதும், இதற்குக் காரணம் மனிதர்களின் தீய எண்ணங்களின் விளைவு என்பதை உணர்ந்து இதனால் உலகின் ஒட்டுமொத்தமான கர்மக்கணக்கு தீர்ந்துவருகிறது என்பதால், தியானத்தில் அமர்ந்து, அவர் தன் மனதில் கவலையை உருவாக்காமல், இவ்வாறு துன்பத்தில் வாடிவரும் ஆத்மாக்கள் மனசாந்தி பெறவேண்டும் என்பதற்காக அமைதி அலைகளையே எங்கும் பரவச்செய்து வருவார். இவ்வாறு தம் குடும்பம், சமூகம், தேசம், உலகம் ஆகிய எந்த ஒன்றில் ஏற்படுகின்ற துக்கமயமான சூழ்நிலையிலும், உணர்ச்சி வசப்படாது, தமது மன அமைதி யையும் நிலைக்கச் செய்துவந்து மற்றவர்களையும் அமைதி அடையச் செய்வதில் வெற்றி பெற்றுவருகிறார்.

ஆன்மீகப் பார்வை (திருஷ்டி) தான் ஒரு ஆத்மா என உணர்ந்து உயர்ந்த எண்ணம், சொல், மற்றும் செயல் மூலமாக உயர்ந்த நிலையில் யோகி நிலைத்திருக்கிறார். அத்துடன் மற்றவர்கள் அனைவரும் ஆத்மாக்கள் தான், ஆத்மீக ரீதியில் அனைவரும் பரமாத்மாவின் குழந்தைகள் என்கிற சகோதரத்துவ கண்ணோட்டம் ஏற்படுகிறது. இவ்வாறு மற்றவர்களையும் உயர்ந்த, தூய்மையான ஆத்மாக்கள், சகோதரர்கள் என்று உணரும்போது, அவர்கள் மீது இயற்கையாகவே ஒரு சுயநலமற்ற அன்பு ஏற்படுகிறது. அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளையும் மன்னித்து மறக்கும் பெருந்தன்மை தோன்றுகிறது. ஆகவே இத்தகைய உயர்ந்த மனப்பான்மையுடன், அமைதியுடன் இருந்துவரும் யோகியைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறமும் மிகுந்த அமைதியை அனுபவம் செய்யும். இத்தகைய கண்ணோட்டத்துடன் பெறும்பான்மை யோர் இருந்து வருகின்ற ஒரு சூழ்நிலைதான் அமைதியை அகில உலக அளவில் உருவாக்க வல்லதாகும்.

இவ்வுலகில் சரியான வழியில் செல்ல நமக்கு ஆவல் இருப்பினும் அவ்வாறு செல்ல முடிவதில்லை. காரணம் என்ன? நாம் அனைவரும் ஆத்மாக்கள், நடிகர்கள் என்பதை மறந்திருப்பது. இந்த உலகம் ஒரு நாடகமேடை என்பதை மறந்திருப்பது. நமது இந்த உடல்தான் நாம் என்று தவறாகக் கருதிவருவது. நம்மைச் சுற்றிலும் நடந்துவருவது ஒரு நாடகம் என்பதை மறந்திருப்பது. நாம் ஆத்ம உலகவாசிகள், இங்கு வந்து நடித்து வருகிறோம் என்பதை மறந்திருப்பது. நமது உடல் உணர்வினால், பரமாத்மாவிடமிருந்து நாம் துண்டிக்கப்பட்டுவிட்டோம் என்பதை அறியாதிருப்பது. ஊழ்வினைதான் இவற்றிற்குக் காரணம் என்பதை மறந்திருப்பது. கர்மத்தின் ஆழ்ந்த ரகசியங்கள். ஆத்மாவானது, தனது உடலின் மூலமாக செயலாற்றி வருவதையே கர்மா என்கிறோம். உடல் பலவகையான செயல்களைச் செய்து வருகிறது. சுவாசிப்பது, காண்பது, பேசுவது, தொடுவது, நடப்பது ஆகிய அனைத்துமே செயல்கள் அதாவது கர்மாக்கள்தான். ஒவ்வொரு செயலுக்கு ஏற்படும் பலன் அதற்கு ஏற்பவே சரிசமமாக அமையும் என்பது கர்மவிதி. நமது மனோபாவம், எண்ணம், குணநலன்கள் ஆகியவற்றிற்கு ஏற்பவே நமது செயல்கள் அமைகின்றன. நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு. ஆகவே இச்செயல்களால் நமக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் விளைவுகளை நாம் அறிந்திருப்பது மிகவும் அவசியம். இதற்கும் மேலாக நமது எண்ணங்களும் சூட்சுமமாக விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை பலர் அறிவதில்லை.

தன்னை உணர்தலும், செயல்களும்: தன்னை அறிவதென்றால், தான் ஒரு ஆத்மா என்பதையும் ஆத்மாவின் செயல்களால் ஏற்படும் விளைவுகளையும் அறிவதே ஆகும். இதில் கவனம் செலுத்தாவிட்டால், நாம் முன்னேற இயலாது. நமது எந்த ஒரு செயலும் நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மை விளைவிக்கவல்லதா என்பதை நாம் பார்க்கவேண்டும். இதனால் நமக்கும், மற்றவர்களுக்கும் சேவை ஏற்படுகிறது. கவனக்குறைவின் காரணமாக ஏதேனும் தவறு ஏற்பட்டுவிட்டால். நமது ஞானமும், யோகமும் அதை உணர்ந்து நம்மை சீர்திருத்திக் கொள்ள உதவுகின்றன. இந்த உலகம் என்கிற கர்மஷேத்திரத்தில், ஆத்மாவின், மனம், புத்தி, சமஸ்காரம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயலை உருவாக்குகின்றன. புத்தியானது தனது பழைய தீய சமஸ்காரங்களின் மீது ஏற்படுத்துகின்ற கட்டுப்பாட்டிற்கு ஏற்ப, புதிய சிறந்த சமஸ்காரங்களை உருவாக்கி செயல்படுவதன் அடிப்படையில் ஆத்மாவானது, உயர்ந்த நிலையில் பறந்து, அமைதி, ஆனந்தம், சுகம் ஆகியவற்றை அனுபவம் செய்ய இயலும். தன் அனாதியான ஆத்மீக ஸ்திதியில் இருக்கும்போது சுகத்தை ஆத்மா அனுபவம் செய்கிறது. மாறாக உடல் உணர்வுடன் செயலாற்றும்போது மன அமைதியை ஆத்மா இழந்துவிடுகிறது. ஆகவே ஆத்மா, தன் சுய தர்மமான அமைதி, தூய்மை ஆகியவற்றை உணராவிட்டால், அது துக்கம், துன்பத்திலிருந்து தப்ப முடியாது. தூய்மைதான் சாந்தி, சுகத்திற்கு ஆதாரம் ஆகும். தூய்மை என்றால், பிரம்மசரியம் மட்டும் அல்ல. தூய்மை நம் எண்ணம், சொல், மற்றும் செயல் ஆகிய அனைத்திலும் இருக்க வேண்டும். தன்னைப் பற்றியோ, அல்லது மற்றவரைப் பற்றியோ எண்ணுவது, பிற வீண் எண்ணங்கள் ஆகிய அனைத்தும் அபவித்திரத்தின் அடையாளங்கள் தாம். இக்காலத் தில் நாம் காணும் துக்கம் துன்பத்திற்குக் காரணம் கடந்த காலத்தின் அபவித்திரம்தான். இப்பிறவியில் அல்லது முற்பிறவி களில் செய்த தூய்மையற்ற செயல்கள்தான் பாவம் ஏற்படுவதற் கான காரணமாகும். இந்தப் பாவச்சுமையே துக்கத்தை ஏற்படுத்துகிறது. தூய்மையான ஆத்மா ஒருபோதும் துக்கத்தை அனுபவிப்பதில்லை. ஆத்மா தன் கடந்த காலத்தில் அடைந்த பாவச் சுமையை இக்காலத்தில் துன்பத்தை அனுபவிப்பதன் மூலமாக அழிக்க முடியுமா? என்கிற கேள்வி எழுகிறது. 

அது முடியாது. ஏன் என்றால். கடந்த காலத்தில் உருவாகிய தீய சமஸ்காரங்கள் இக்காலத்திலும் தீய செயல்களையே செய்வதற்கான வித்தாகின்றன. ஆகவே ஆத்மா தொடர்ந்து தீச்செயல்களையே செய்துவருவதால், அது பழைய கர்மக்கணக்கின் விளைவாக துன்பத்தை அனுபவித்து அதைக்குறைக்க முயன்றாலும், தற்காலத்திய தீய செயல்கள், கர்மக்கணக்கின் சுமையை இன்னும் அதிகரித்தே வரும். தீய சமஸ்காரம், தீய எண்ணத்தையும், அதன் விளைவாக தீய செயல்களும் செய்யப்பட்டு வருகின்றன. கலியுகத்தின் இயல்பு நிலையே அதுவாகி விட்டது. இதனால் உலகில் நாம் காணும் ஆத்மாக்களின் நிலை தொடர்ந்து சீரழிந்துவருகிறது. இதற்கு எல்லாம் காரணம் ஆத்ம உணர்வு இல்லாது, தேகஉணர்வில் இருந்து செயலாற்றிவருவதே ஆகும். இப்போது இந்த தாழ்ந்துவரும் நிலையைத் தடுத்து நிறுத்த வல்லது இந்த இராஜயோகம் ஒன்றுதான். இராஜயோகம் முதலில் ஒருவருக்கு ஆத்ம உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த யோகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால் அதிகரித்துவரும் ஆத்ம உணர்வு இதுவரை இருந்துவந்த உடல் உணர்வை நீக்குகின்றது. இதனால், ஆத்மா ஆத்ம உணர்வுடன் செயலாற்றுகிறது; புதிய உயர்ந்த சமஸ்காரங்கள் உருவாகின்றன. செயல்கள் யாவும் உயர்ந்தவை ஆகி புண்ணியத்தின் கணக்கை அதிகரித்து, பாவச்சுமையை குறைத்து வருகின்றன. இதனால் ஆத்மா தூய்மையாகி, தன் அனாதியான சுயதர்மமான அமைதி, சாந்தி,சுகத்தை அனுபவம் செய்ய ஆரம்பிக்கிறது. தியானப் பயிற்சி சமஸ்காரங்களைத் தூய்மையாக்குவது; கீழ்க்காணும் எண்ணங்களை உருவாக்கி இந்த நிலையில் 10 நிமிடங்கள் தியானத்தில் நிலைத்திருங்கள்.